தேடுதல்

வியட்நாம் நாட்டில் அண்மைப் புயல்கள், மற்றும், வெள்ளப்பெருக்கால் பாதிப்பு வியட்நாம் நாட்டில் அண்மைப் புயல்கள், மற்றும், வெள்ளப்பெருக்கால் பாதிப்பு  (HOCAU091532709)

மதப்பாகுபாடுகள் நோக்காமல் அனைவருக்கும் உதவும் காரித்தாஸ்

வியட்நாமின் அண்மை கால 13 புயல்களால், 140க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்துள்ளதுடன், பலர் காணாமல்போயும், பல ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தும் உள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

வியட்நாம் நாட்டின் அண்மைப் புயல்கள், மற்றும், வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் எவ்வித பாகுபாடுகளும் இன்றி உதவிகளை வழங்கிவருகிறது, அந்நாட்டின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

வியட்நாமின் மத்திய மாவட்டங்கள் பல அண்மை கால 13 புயல்களால் பாதிக்கப்பட்டு, 140க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்துள்ளதுடன், பலர் காணாமல்போயும், பல ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தும் உள்ள நிலையில், அவ்விடங்களைப் பார்வையிட்டு உடனடி உதவிகளை வழங்கிவருகிறது, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

மக்கள் பலரின் வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக தகர்க்கப்பட்டுள்ள நிலையில், புயல்களாலும் அதன் விளைவான வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, மதம் என்ற பாகுபாடு நோக்காமல் அனைவருக்கும், அவர்களின் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில், அடிப்படை உதவிகளை ஆற்றி வருகின்றது, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் ஆற்றிவரும் அதேவேளையில், வியட்நாம் கத்தோலிக்கர்களும், புயல், மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் ஆற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார், வியட்நாம் காரித்தாஸின் புதிய இயக்குனர், அருள்பணி Joseph Ngô Sĩ Đình. (AsiaNews)

17 November 2020, 15:08