தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர் Mario Grech திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர் Mario Grech  

திருஅவையின் ஒன்றிப்புக்குப் பணியாற்ற...

மால்ட்டா நாட்டின் Gozo மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயரான மாரியோ கிரேக் அவர்கள், 2019ம் ஆண்டில், உலக ஆயர்கள் மாமன்றத்தின் துணை பொதுச்செயலராகவும், 2020ம் ஆண்டு செப்டம்பரில் அதன் பொதுச் செயலராகவும் நியமிக்கப்பட்டார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னை கர்தினாலாக அறிவித்திருப்பது குறித்து, வத்திக்கான் செய்தித்துறைக்குப் பேட்டியளித்த, மால்ட்டா நாட்டு ஆயர் Mario Grech அவர்கள், இந்த அறிவிப்பு, திருஅவையின் ஒன்றிப்பிற்கு அதிகமதிகமாகப் பணியாற்றத் தூண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் ஒன்றிப்பில் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்றும், திருஅவை மீது திருத்தந்தை வைத்துள்ள தொலைநோக்குப் பார்வையைச் செயல்படுத்துவதற்கு, இது தனக்கு ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும், ஆயர் Grech அவர்கள் கூறினார்.

கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 13 பேரை புதிய கர்தினால்களாக  அறிவித்தார். அந்த 13 பேரில் ஒருவரான 63 வயது நிரம்பிய, ஆயர் Grech அவர்கள், திருஅவையின் மேய்ப்புப்பணிக்காக, திருத்தந்தை கொண்டுள்ள கண்ணோட்டத்தை ஊக்குவிப்பதில், தனது புதிய பங்கு மற்றும், நம்பிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார்.

மால்ட்டா நாட்டின் Gozo மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயரான Mario Grech அவர்கள், 2019ம் ஆண்டில், உலக ஆயர்கள் மாமன்றத்தின் துணை பொதுச்செயலராகவும், 2020ம் ஆண்டு செப்டம்பரில் அதன் பொதுச் செயலராகவும் நியமிக்கப்பட்டார். 

03 November 2020, 14:43