தேடுதல்

ஆஸ்திரேலிய பழங்குடி இனத்தவர் ஆஸ்திரேலிய பழங்குடி இனத்தவர்  (ANSA)

ஆஸ்திரேலிய பழங்குடி இனத்தவர்க்கெதிரான அநீதிகளைக் களைய...

ஆஸ்திரேலியாவின் மையப்பகுதியிலும், Tasmania, Fraser Island, Hinchinbrook Island, Tiwi Islands, Groote Eylandt போன்ற தீவுகளிலும், ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே, பூர்வீக இனத்தவர் வாழ்ந்து வருகின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆஸ்திரேலியாவில், கடந்த காலத்தில் பூர்வீக இனத்தவர்க்கெதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு மன்னிப்புக் கோரி, அம்மக்களோடு ஒப்புரவாகும் செயல்திட்டம் ஒன்றை, அந்நாட்டு உயர்மறைமாவட்டம் ஒன்று ஆரம்பித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் Brisbane உயர்மறைமாவட்டம் தொடங்கியுள்ள இந்த ஒப்புரவு திட்டத்தின்படி, ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தில், அந்நாட்டு பூர்வீக இனத்தவர் அனுபவித்த அநீதிகள் மற்றும், காயங்களுக்குப் பிராயச்சித்தம் தேடி, அம்மக்களோடு நல்லுறவை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உறவுகள், மதித்தல், வாய்ப்புகள், மேலாண்மை ஆகிய நான்கு தலைப்புக்களில் இந்த நடவடிக்கை இடம்பெறுகின்றது என்றும், Brisbane உயர்மறைமாவட்டத்தில், பூர்வீக இன மக்களுக்கு வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

1986ம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் Alice Springs நகரில், திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், பூர்வீக இன மக்கள்பற்றி ஆற்றிய உரையால் உள்தூண்டுதல் பெற்று, இந்த புதிய முயற்சியை, Brisbane உயர்மறைமாவட்டம் மேற்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மையப்பகுதியிலும், Tasmania, Fraser Island, Hinchinbrook Island, Tiwi Islands, Groote Eylandt போன்ற தீவுகளிலும், ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே, பூர்வீக இனத்தவர் வாழ்ந்து வருகின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது.   

2016ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையில் இம்மக்கள் 3.3 விழுக்காட்டினர் ஆவர்.

21 November 2020, 14:55