தேடுதல்

மரியா, இரக்கத்தின் அன்னை மரியா, இரக்கத்தின் அன்னை  

மரியா, இரக்கத்தின் அன்னை - அருள்பணி அமல்ராஜ் ம.ஊ.ச.

இரக்கப்பணியே கிறிஸ்தவ வாழ்வின் மையமாக இருக்கிறது. இரக்கப்பணி இல்லாமல் கிறித்தவம் இல்லை - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

1571ம் ஆண்டில், லெப்பந்தோ கடற்போரில், துருக்கிய படைகளுக்கு எதிராக ஐரோப்பிய கிறிஸ்தவப் படைகள் போர் தொடுத்தவேளையில், கிறிஸ்தவர்கள் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் சதுக்கத்தில் கூடி தொடர்ந்து செபமாலை செபித்தனர். அதன் விளைவாக, அந்த போரில் கிறிஸ்தவப் படைகள் வெற்றியும் பெற்றன. இவ்வாறு பக்தர்கள், அன்னை மரியாவின் பரிந்துரையை கேட்கும்போதெல்லாம், அந்த அன்னை அற்புதங்களை ஆற்றி வருகிறார் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த அக்டோபர் மாதத்தில், இன்றைய நிகழ்ச்சியில், மரியின் ஊழியர் சபையின் அருள்பணி அமல்ராஜ் அவர்கள், அன்னை மரியா, இரக்கத்தின் அன்னை என்ற தலைப்பில் உரை வழங்குகிறார்

மரியா, இரக்கத்தின் அன்னை - அருள்பணி அமல்ராஜ் ம.ஊ.ச

அருள்பணி அமல்ராஜ் ம.ஊ.ச.

மரியாள், இரக்கத்தின் அன்னை

1. லௌரன்டைன் மரியாள் மன்றாட்டு மாலையில் (டுவையnயைந டயரசநவயயெந) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மூன்று புதிய வாழ்த்தொலிகள் பற்றி உலகெங்கும் பரவி வாழும் வத்திக்கான் வானெலி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். 2015 - 2016ம் ஆண்டை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டாக அறிவித்து, உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களை, 'உங்கள் வானகத்தந்தை இரக்கமுள்ளவராக இருப்பதைப்போல நீங்களும் இரக்கமுள்ளவராக இருங்கள்" என்ற வார்த்தைகளை மையமாக வைத்துச் சிந்திக்க அழைத்தார். இரக்கம் என்ற வார்த்தையானது, தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடைய மறைபரப்புப் பணியின் மிக முக்கியமானதொரு அம்சமாக இருக்கின்றது. எனவேதான், 'இரக்கப்பணியே கிறிஸ்தவ வாழ்வின் மையமாக இருக்கிறது என்றும், இரக்கப்பணி இல்லாமல் கிறித்தவம் இல்லை" என்றும், இயேசுவின் மலைப்பொழிவு பற்றிய தன்னுடைய மறைக்கல்வியில் முன்னாள் திருத்தந்தையும் புனிதருமான இரண்டாம் அருள் சின்னப்பர் அவர்களுடைய வார்த்தைகளை மேற்கோள்காட்டி கிறிஸ்தவர்கள் அனைவரையும் இரக்கத்தோடு வாழ அழைக்கின்றார்.

இதன் முக்கியத்துவத்தை உணர்த்தவே, அகில உலக கத்தோலிக்க திருச்சபையின் திருவழிபாட்டு பேராயமானது (Congregatio de cultu divino et disciplina sacramentorum) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்திற்கிணங்க லௌரன்டைன் மரியாள் மன்றாட்டு மாலையில் மூன்று புதிய வாழ்த்தொலிகளைச் சேர்க்கும் ஆணையை இந்த ஆண்டு ஜூன் மாதம் 20-ஆம் தேதியன்று அறிவித்தது.  அம்மூன்று புதிய வாழ்த்தொலிகள்: “Mater misericordiae”, “Mater Spei”, “Solacium migrantium” அதாவது, மரியாள், இரக்கத்தின் அன்னை, மரியாள், நம்பிக்கையின் அன்னை மற்றும் மரியாள், புலம்பெயர்ந்தோரின் ஆறுதல் என்பனவாகும்.

இவற்றுள் முதன்மையானது, “Mater misericordiae”, அதாவது மரியாள், இரக்கத்தின் அல்லது கருணையின் அன்னை என்பதாகும். திருச்சபையின் அன்னை மரியாளுக்கான பக்தி முயற்சியில் 'இரக்கத்தின் தாய்" என்று பொருள்படும் “Mater misericordiae” vd;w வார்த்தையானது மிக முக்கியத்துவம் பெற்றதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதொரு சொல்லுமாகும். குறிப்பாக, இவ்வார்த்தையானது அன்னை மரியாளுடைய புகழ்ச்சிப் பாடலிலும், மிகவும் சிறப்புபெற்ற Salve Regina ன்ற பாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் சாதாரண மக்களையும் சென்றடைந்திருக்கின்றது. மேலும், புனித பெர்னார்து இலத்தீன் மொழியில் எழுதிய Memorare, O piissima Virgo Maria, என்று அழைக்கப்படும் 'மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து" எனத் துவங்கும் செபமானது கத்தோலிக்க திருச்சபையில் தூய கன்னி மரியாவை நோக்கி சொல்லப்படும் மிகவும் புகழ்பெற்ற செபமாகும். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வார்த்தையின்; அர்த்தத்தை உணர்ந்து செபிக்கும்போது அதன் பலனை நாம் முழுமையாகப் பெறமுடியும் என்பதை உணர்ந்து இதைப்பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.  

2. “Mater misericordiae”, அதாவது 'மரியாள், இரக்கத்தின் அன்னை" என்ற வாழ்த்தொலியின் வரலாறு

மரியாள், இரக்கத்தின் அன்னை என்பது பல அர்த்தங்களைக் கொண்ட வளமையும் செழுமையும் உள்ள ஆழமானதொரு அர்த்தம் நிறைந்த வாழ்த்தொலியாகும். இதன் வழியாக நம் கடவுள் எப்படிப்பட்டவர், அக்கடவுளின் தாயாகிய அன்னை மரியாளின் குணங்கள் யாவை, நமது மீட்பின் வரலாறு மற்றும் பாதை எப்படிப்பட்டது போன்ற கேள்விகளுக்கான பதில்களும் இவ்வாழ்த்தொலியில் நாம் காணலாம்.  எனவேதான் இவ்வாழ்த்தொலியானது பழமையானதும் பல புதிய கோணங்களையும் அர்த்தங்களையும் கொண்டதும் ஆகும்.

இவ்வாழ்த்தொலியானது கிறித்தவத்தின் தொடக்க காலத்திலிருந்தே அவர்களுடைய கல்லரை மற்றும் ஆலய ஓவியங்களிலும், அவர்களுடைய திருவழிபாட்டுச் செபங்கள் மற்றும் பாடல்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆக, இது சாதாரண மக்களுடைய அன்னை மரியாள் மீது அவர்களுக்குள்ள விசுவாச மற்றும் அன்பின் வெளிப்பாடாகும்.

நான் ஏற்கனவே, என்னுடைய பல மரியன்னைச் சிந்தனைகளில் கூறியுள்ளவாறு, இவ்வாழத்தொலியும் மரியன்னைக்கென முதன் முதலில் எழுதப்பட்ட “Sub tuum praesidium confugimus” என்ற பாடலில் உள்ளதாகும். இப்பாடலில், இரக்கம் என்ற பொருள்படும் பல கிரேக்கச் சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதைக்கொண்டு திருச்சபையின் ஆதிக்காலத்திலேயே கிறிஸ்தவாகள் எவ்வாறு மரியாளை இரக்கம் நிறைந்த அன்னையாகக் கருதி தங்களுடைய ஆபத்துக்களிலிருந்து மீட்குமாறு அவளிடம் வேண்டினர் என்பதை அறியலாம்.

பிறகு, திருச்சபைத் தந்தையர்கள் காலத்தில் (Patristic Tradition) 6-ஆம் நூற்றாண்டில்  வாழ்ந்த செருக் நகரத்து யாக்கோபு (Jacob of Serugh) என்பவர்தான் முதன் முதலில் மரியாளை இரக்கத்தின் அன்னை என்று அழைத்தார். அதுமுதல் மரியாளை இரக்கத்தின் அன்னை என்று அழைத்து செபிக்கும் பல இடங்களுக்கும் பரவிது. மேலும், 6-ஆவது நூற்றாண்டின் முதல் பாதியில் வாழந்த ரொமானுஸ் மெலோடிஸ்ட் (Romanos the Melodist) என்பவர், மரியாள் அந்நியர்களுக்கும் எதிரிகளுக்கும்கூட தாயாவார், ஏனெனில் அவர் உண்மையிலேயே இரக்கத்தின்; தாய் மற்றும் இரக்கமுள்ள தாய் என்று கூறினார்.

பிற்காலத்தில், விசுவாசிகளுடைய செபத்திலும் வழிபாட்டிலும் கலை இலக்கிய ஓவியங்களில் மட்டுமல்லாமல் மற்ற தளங்களிலும் குறிப்பாக இறையியில் தளத்திலும் மரியாளை இரக்கத்தின் அன்னை என்று அழைக்கும் வழக்கம் மெதுவாகப் பரவத் தொடங்கியது. எடுத்துக்காட்டாக 10-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த ஜெயோமெட்ரா அருளப்பர் (Giovanni il Geometra) என்பவர் மரியாள் முதலில் தன் பூவுலக வாழ்வின் பொழுதும் பிறகு விண்ணகத்திலிருந்தும் தன்னுடைய இரக்கத்தைக் காட்டுகின்றாள் என்கின்றார். மேலும் அவர், 'மனிதர்களை அதிகமாக அன்பு செய்யும் இறைவன் மரியாளை நமக்குத் தந்ததன் வழியாக இன்னும் இரக்கமுடையவராகின்றார். இறைவன் மனிதர்கள் மீது வைத்த அளவு கடந்த அன்பினால் மரியாளைத் தேர்ந்தெடுத்து அவளை ஒரு இரக்கமுள்ளவளாக மட்டுமல்ல, ஓர் நடுநிலையாளராகவும் கடவுளிடம் மனிதர்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் ஒப்புரவுப் பணியில் ஒத்துழைப்பவராகவும் உயர்த்தினார்" எனறு கூறுகின்றார்.

'உண்மையில், மரியாள் கருணை, இரக்கம் மற்றும் உயிரோட்டமுள்ள அன்பு இவைகளால் நிரப்பப்பட்ட நேரத்திலிருந்து இறை இரக்கத்தின் மறு உருவமானாள்" என்று கி.பி. 1381ஆம் ஆண்டு வாழ்ந்த நிசேயா நகரத்து மரிய தெயோபானே (Maria Teofane of Nicea) என்பவர் கூறுகின்றார்.

இவ்வாறு, மரியாள் கிழக்கத்தியத் திருச்சபையால், இறை இரக்கத்தின் அன்னை என்று கொண்டாடப்பட்ட இந்த வழக்கமான, 10-வது நூற்றாண்டிலிருந்து வெகு விரைவிலேயே மேற்கத்திய நாடுகளிலும் அங்கிருந்த துறவிகள் வழியாகப் பரவி வளர்ந்தது. துறவற மடங்களில் அவர்களுடைய அனுதின வழிபாடுகளில் செபிக்கப்படும் செபங்களிலும், பாடப்படும் பாடல்களிலும் மரியாளை இரக்கத்தின் தாயாகக் கொண்டாட ஆரம்பித்தனர்.

உதாரணமாக, க்ளுனி நகரத்து ஓதோ  (Odo of Cluny) என்னும் துறவி மரியாளை இரக்கத்தின் அன்னை என்று பொருள் படும; Mater Misericordiae என்னும் பெயரால் அழைக்க ஆரம்பித்தார் (Vita Odonis Clun., II, 20: PL 133, 72). பின்னாளில் புனித பெர்னார்து, பாவிகள் அனைவருக்காகவும் தனது மகனிடம் பரிந்து பேசுகின்றதொரு தாயாக மரியாளைக் கருதி அவளை “இரக்கமுள்ள பரிந்துரையாளர்” என்று பொருள்படும் avvocata misericordiosa  என்று பாடினார் (In nativitate B.M.V. Sermo, 7). அதைத் தொடர்ந்து, நவீன காலத்திலும்கூட இறையியல் உரையாடல்களிலும் மக்களுடைய மரியன்னை பக்தியிலும் «Mater misericordiae» ன்று மரியாளை அழைக்கும் வழக்கமானது வெகுவாகப் பரவியதைக் காணலாம்.

கி.பி. 1619-ல் வாழ்ந்த பிரின்திசி நகரத்து லாரன்ஸ் கி.பி. 1619-ல் வாழ்ந்த பிரின்திசி நகரத்து லாரன்ஸ் (Lawrence of Brindisi) என்பவர் மரியாள் அளவில்லாத இரக்கத்தினால் நிறைந்தவள் என்று பொருள்படுகின்ற வகையில; Mater misericordiae என்று அழைத்தார். மேலும், கிபி. 1787ல் வாழ்ந்த  புனித அல்போன்ஸ் மரிய லிகோரி [Alphonsus Maria de Liguori (†1787)]  “இப் பூமியில் உள்ள ஏழைகளுக்கு உதவுவதற்காக அவருடைய இரண்டு கண்களிலும் இரக்கமானது நிரம்பி வழிவதாகக்” கூறுகின்றார் (Le glorie di Maria, p. I, Cap. I, Valsele Tip., Materdomini 1987, p. 221). 

நம்முடைய இந்த பிந்தைய நவீன காலத்திலும்; (Post Modernism) நம்மிடையே வாழ்ந்து அன்னை மரியாளுக்காகத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்ததால் புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட திருத்தந்தை இரண்டாவது அருள் சின்னப்பர்; Dives in misericordia மற்றும்; Redemptoris Mater  என்னும் தன்னுடைய இரண்டு திருமடல்களில் 'மரியாள், இரக்கத்தின் அன்னை" என்ற கருத்தினை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றார்

இறுதியாக, இத்தாலிய மொழியில் உள்ள அன்னை மரியாள் திருப்பலிப் புத்தகத்தில் ,Ujpahf>; [Messale mariano italiano (1987)] கிட்டத்தட்ட 8 திருப்பலி செபங்கள் மரியாள், இரக்கத்தின் அன்னை என்று பொருள்படும் பல்வேறு கருத்துக்களில் உள்ளன. குறிப்பாக, அதில் உள்ள 39-வது திருப்பலி செபமானது மிகத்தெளிவாக 'கன்னி மரியாள், இரக்கத்தின் அன்னை மற்றும் அரசி (Maria Vergine: Regina e Madre della Misericordia) என்ற பொருளில் அமைந்துள்ளது சிறப்பானதாகும்

3. 'மரியாள், இரக்கத்தின் அன்னை": பொருள் மற்றும் விளக்கம்

இரக்கம் என்கின்ற இந்த வார்த்தையானது மிகவும் இனிமையான மற்றும் அழகானதொரு வாhத்தையாகும். அதே நேரத்தில் இது புரிந்துகொள்வதற்குக் மிகவும் கடினமான மற்றும் சிக்கலானதொரு வார்த்தையாகவும் இருந்துள்ளதை நாம் வரலாற்றில் காணலாம். இது பல காலகட்டங்களில் பலராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது மற்றும் தவறான அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவேதான், பல்வேறு கலாச்சாரங்களால் கைவிடப்பட்டதொரு வார்த்தையாகவும் இது இருந்துள்ளது (இருக்கின்றது!). ஏனெனில், இரக்கம் என்னும் இந்தச் சொல்லானது பலவீனமான, கைவிடப்பட்ட மற்;றும் மேலோட்டமான ஒரு சொல் என்ற எண்ணமானது மக்கள் மத்தியில் நிலவியது.

உதாரணமாக, காரல் மார்க்ஸ் (K. Marx) போன்ற கம்யூனிசவாதிகளால் இரக்கம் அல்லது கருணை போன்ற வார்த்தைகள் குழப்பமானதொரு சித்தாந்தமாக சந்தேகிக்கப்பட்டது. ஏனெனில், கம்யூனிசக் கொள்ளையுடையவர்கள் இரக்கம் மற்றும் கருணையை, நீதிக்கு எதிரானதொன்றாகப் பார்த்தனர். இந்தச் சித்தாந்தத்தைத் தழுவியே பிரடெரிக் நீட்சே (Fr. Nietzsche) இரக்கம் மற்றும் கருணை போண்றவை 'மிகவும் ஆரோக்கியமற்ற நல்லொழுக்கங்கள்" என்று வரையறுத்தார்.  

ஆனால், கிறிஸ்தவர்களுக்கோ இவ்வார்த்தைகள் 'மறைபொருள்கள் பல நிறைந்த பொருள்பொதிந்து  வார்த்தையாகும்" என்று நமது திருத்தந்தை பிரன்சிஸ் அவர்கள் தனது பல்வேறு கடிதங்கள் உரைகள் வழியாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள். இக்கருத்தை மையப்படுத்துவதற்கும் இதனுடைய நேர்மறைச் சிந்தனையை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் எண்ணிய அவர் 2015-2016 ஆம் ஆண்டை இறை இரக்கத்தின் யூபிலி ஆண்டாகக் கொண்டாடச் செய்தார். மேலும் அவர், 'இரக்கம் என்றகின்ற வார்த்தையானது நீதிக்கு எதிரானதொரு வார்த்தை அல்ல: அதே நேரத்தில் அது வெற்றியினுடைய அடையாளமும் அல்ல, அனைத்தையும் கடந்து உறுதியோடு நிற்கக்கூடியதொன்று" என்பதையும் வலியுறுத்துகின்றார். சுருக்கமாகக் கூறவேண்டுமெனில், மரியாள் என்கின்ற ஒரு பெண் வழியாக நிகழந்த மனுவுருவாதல்; (incarnation) வழியாக இரக்கமானது வரலாறாக மற்றும் கலாச்சாரமாக மாறுகிறது. இக்கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னுடைய இரக்கத்தின் யூபிலி ஆண்டு மடலான Misericordiae Vultus  வழியாக மிகத்தெளிவாக விளக்குகின்றார் (MV, n. 7). இயேசுவைத் தன் கருவில் தாங்கியதன் வழியாக இறைத்திட்டத்தில் முழுமையானதொரு பங்களிப்பை மரியாள் அளிக்கின்றாள். சுருங்கக்கூறவேண்டுமெனில், லௌரன்டன் மரியாள் மன்றாட்டு மாலையில் மரியே, இறைவனின் தாயே என்கின்ற வாழ்த்தொலியை இணைத்ததன் வழியாக இன்று நம்மோடு வாழும் நலிவுற்ற ஏழை எளிய மக்களுக்கான இறை இரக்கத்தினுடைய அவசியத்தை திருத்தந்தை பிரன்சிஸ் வலியுறுத்துகின்றார். இதையே, ஏற்கனவே தனது இறை இரக்க ஆண்டிற்கான மடலிலும், 'இறை நம்பிக்கையாளர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இறையரசின் அடையாளமாக நம் மத்தியில் நிறைந்திருக்கும் இரக்கத்தின் தைலமானது சென்றடையட்டும்" என்று வாழ்த்துகின்றார் (MV, n. 5).

எனவே, நாம் செபமாலை செபிக்கும் ஒவ்வொரு நாளும், மரியே, இரக்கத்தின் தாயே என்று அன்போடு அழைத்து அவளுடைய இரக்கத்தையும் துணையையும் பாதுகாவலையும் வேண்டி இறை ஆசியை அவள் வழியதாக நிறைவாகப் பெற்று வாழ்வோம். இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்.

22 October 2020, 15:17