தேடுதல்

மதுரை இலொயோலா டி.வி. உருவாக்கிய காணொளியின் விளம்பரம் - இயேசு சபை அருள்பணியாளர்கள் ஸ்டான் சுவாமி, சகாய பிலோமின்ராஜ் மதுரை இலொயோலா டி.வி. உருவாக்கிய காணொளியின் விளம்பரம் - இயேசு சபை அருள்பணியாளர்கள் ஸ்டான் சுவாமி, சகாய பிலோமின்ராஜ்  

நேர்காணல்: மனித உரிமைப் போராளி அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச

இயேசு சபை அருள்பணி ஸ்டான் லூர்து சுவாமி அவர்கள், இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில், ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக, பூர்வீக இன மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக அரும்பாடுபட்டு வருகிறவர். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்

மேரி தெரேசா: வத்திக்கான்

தமிழரான இயேசு சபை அருள்பணி ஸ்டான் லூர்து சுவாமி அவர்கள், இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில், ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக, பூர்வீக இன மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக அரும்பாடுபட்டு வருகிறவர். மனித உரிமை ஆர்வலர் மற்றும், சமுதாயப் போராளியான 83 வயது நிரம்பிய அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு, பொய்க் குற்றம் சாட்டி, இராஞ்சியில் அக்டோபர் 8, கடந்த வியாழன் இரவில் அவரை கைது செய்து, மும்பையில் சிறையில் அடைத்துள்ளது. அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், கைதுசெய்யப்படுவதற்கு சில நாள்களுக்குமுன், ஆங்கில மொழியில், தன்னிலை விளக்கம் அளித்துள்ள காணொளி ஒன்று வலைத்தளங்களில் பதிவாகியுள்ளன. இவ்வேளையில் பாசிச அரசுகளையும், பன்னாட்டு பெரு நிறுவனங்களின் அட்டூழியங்களையும் நடுநடுங்க வைத்துவரும் அருள்பணி சுவாமி அவர்களுக்கு நடந்தது என்ன? என்பது பற்றி மதுரை இலொயோலா TV உருவாக்கிய காணொளி ஒன்றில், வழக்கறிஞரான, இயேசு சபை அருள்பணி சகாய பிலோமின்ராஜ் அவர்கள் தெளிவாகப் பேசியுள்ளார். இவர், மதுரையில் இயேசு சபையினரின் LAAS என்ற சட்ட ஆலோசனை அமைப்பில், மனிதக்கழிவுகளை, மனிதர்களே கைகளால் அள்ளும் செயலை இரத்து செய்வதற்காக உழைத்து வருகிறவர்

நேர்காணல்:மனித உரிமைப் போராளி அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச.
15 October 2020, 16:10