நேர்காணல்: உரோம் மரியியல் பாப்பிறை கல்லூரி நிறுவனம்
மரியானும் எனப்படும் மரியியல் பாப்பிறை கல்லூரி நிறுவனம், உரோம் நகரில் ஏறத்தாழ ஆறு நூற்றாண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது
மேரி தெரேசா: வத்திக்கான்
மரியானும் எனப்படும் மரியியல் பாப்பிறை கல்லூரி நிறுவனம், உரோம் நகரில் ஏறத்தாழ ஆறு நூற்றாண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. மரியின் ஊழியர் சபை அருள்பணியாளர்களால் நடத்தப்படும் இந்த நிறுவனம், பாப்பிறை நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டை முன்னிட்டு, அக்டோபர் 24, கடந்த சனிக்கிழமை முற்பகலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில், அந்நிறுவனத்தின் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும், மரியின் ஊழியர் சபை குடும்பத்தினரைச் சந்தித்து அருமையான உரையொன்று வழங்கினார். அந்த சந்திப்பு பற்றி, அருள்பணி முனைவர் டென்னிஸ் அவர்களோடு இன்று கலந்துரையாடுகின்றோம். மரியின் ஊழியர் சபையைச் சார்ந்த இவர், மரியானும் நிறுவனத்தின் முதல்வர் மற்றும், பேராசிரியரும் ஆவார்.
29 October 2020, 13:57