தேடுதல்

இலங்கை புனித அந்தோனியார் கோவில் முன்பு ஓர் அருள்பணியாளர் இலங்கை புனித அந்தோனியார் கோவில் முன்பு ஓர் அருள்பணியாளர் 

அனைத்து ஏழைகளுக்கும் வீடு கட்டித்தர திருஅவை முயற்சி

ஓலைக்கூரை வேயப்பட்ட வீடுகளில் வாழும் மக்களுக்கு, கழிப்பறை வசதிகளுடன், வீடுகளைக் கட்டித்தந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே, தன் நோக்கம் என்கிறார், இலங்கை அருள்பணியாளர் பெரேரா

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள் 

மத வேறுபாடின்றி அனைத்து ஏழை மக்களுக்கும் வீடு கட்டித்தரும் நோக்கத்துடன், கடந்த 14 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டித்தந்துள்ளார், இலங்கை அருள்பணியாளர் ஒருவர்.

ஏழை கிராம மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றவேண்டும் என்ற பேராவலுடன், 2006ம் ஆண்டு இப்பணியைத் துவக்கிய அமலமரி தியாகிகள் துறவு சபையைச் சேர்ந்த அருள்பணி Dilan Perera அவர்கள், இந்து, முஸ்லிம், புத்தம், கிறிஸ்தவம் என எவ்விதப் பாகுபாடும் பார்க்காமல், ஏழை என்ற ஒரே அடிப்படையில், வீடுகளைக் கட்டித்தந்துள்ளார்.

இலங்கையின் Monaragala மாவட்டத்தின் Buttala கிராமத்தில் பணியாற்றியபோது அருள்பணி பெரேரா அவர்களால் துவக்கப்பட்ட இத்திட்டம், அவர், கொழும்பு நகருக்கு மாற்றப்பட்டுள்ளபோதிலும், தொடர்ந்து இடம்பெறுவதாக, அக்கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

ஓலைக்கூரை வேயப்பட்ட வீடுகளில் வாழும் மக்களுக்கு, கழிப்பறை வசதிகளுடன், வீடுகளைக் கட்டித்தந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதே தன் நோக்கம் என்று கூறிய அருள்பணி பெரேரா அவர்கள், உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் உதவியுடன், இலங்கை முழுவதும், இதுவரை, இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டித்தர முடிந்துள்ளது என்று கூறியுள்ளார். (UCAN)

29 September 2020, 12:18