தேடுதல்

Vatican News
கர்தினால் Rai (நடுவிலிருப்பவர் ) கர்தினால் Rai (நடுவிலிருப்பவர் ) 

லெபனான் வெடி விபத்துக்களின் வெளி விசாரணைக்கு அழைப்பு

கர்தினால் Raï : லெபனான் நாட்டின் அரசியல் நிலைகள், அண்மை வெடி விபத்துகள் என அந்நாட்டை, இரட்டை நெருக்கடிகள் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி லெபனான் தலைநகரில் இடம்பெற்ற இரு வெடி விபத்துக்கள் குறித்து, அனைத்துலக விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என, ஐ.நா. நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார், அந்நாட்டு கர்தினால் Beshara Raï.

ஐ.நா.வின் தலையீட்டிற்கு அழைப்பு விடுத்துள்ள மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் Raï அவர்கள், தற்போதைய அரசு, முந்தைய அரசுகளைப்போல், பிரிவினைகள், பாகுபாடுகள் என்ற அடையாளங்களை சுமப்பதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்ற கவலையை வெளியிட்டார்.

190க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கும், 6,500க்கும் மேற்பட்டோர் காயமடைதலுக்கும் மூன்று இலட்சம் பேர் குடிபெயர்ந்தவர்களாக மாறுவதற்கும் காரணமான ஆகஸ்ட் மாத வெடி விபத்துக்கள் குறித்து, சுதந்திரமான, சார்பற்ற விசாரணைகள் இடம்பெறவேண்டும் என அழைப்பு விடுத்தார் கர்தினால்.

நாட்டின் அரசியல் நிலைகள், மற்றும், அண்மை வெடி விபத்துகள் என இரட்டை நெருக்கடிகள், நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன, என்ற லெபனான் கர்தினால், நாட்டை அழிவிலிருந்து காப்பாற்ற, பெரும் மாற்றங்கள் தேவை என உரைத்தார். (AsiaNews)

15 September 2020, 13:55