தேடுதல்

Vatican News
புனித அன்னை தெரேசா, திருவாளர் எம்.ஜி.தேவசகாயம் புனித அன்னை தெரேசா, திருவாளர் எம்.ஜி.தேவசகாயம்  

நேர்காணல்: அன்பின் இலக்கணம், அன்னை தெரேசா

“அன்பின் கடிதத்தை இவ்வுலகத்திற்கு எழுதுகின்ற, இறைவனின் கரங்களில் இருக்கும் சிறிய பென்சில் மட்டுமே நான்” என்று, தன்னைப் பற்றி சொன்னவர், புனித அன்னை தெரேசா. இவர் இந்தியாவில் 45 ஆண்டுகளுக்கு மேலாக, அன்புப் பணியாற்றி, 'அன்னை' எனும் சொல்லுக்கு முழு அர்த்தம் கொடுத்தவர்

மேரி தெரேசா: வத்திக்கான்

“அன்பின் கடிதத்தை இவ்வுலகத்திற்கு எழுதுகின்ற, இறைவனின் கரங்களில் இருக்கும் சிறிய பென்சில் மட்டுமே நான்” என்று, தன்னைப் பற்றி சொன்னவர், புனித அன்னை தெரேசா. இவர் இந்தியாவில் 45 ஆண்டுகளுக்கு மேலாக, ஏழை, எளியோர், புறக்கணிக்கப்பட்டோர், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட நோயாளிகளுக்கு அன்புப் பணியாற்றி, 'அன்னை' எனும் சொல்லுக்கு முழு அர்த்தம் கொடுத்தவர். இந்த அன்னை இறைபதம் அடைந்த 23வது ஆண்டு (செப்டம்பர் 05,1997) நிறைவை செப்டம்பர் 5, வருகிற சனிக்கிழமையன்று நினைவுகூர்கின்றோம். அன்னைத் தெரசா மட்டுமே, வெளிநாட்டில் பிறந்து, இந்திய குடிமகளாக இறந்தவர். இவரது இறப்பிற்கு முழு இராணுவ மரியாதை வழங்கப்பட்டது. ஓய்வுபெற்ற IAS அதிகாரியான திருவாளர் எம்.ஜி.தேவசகாயம் அவர்கள், புனித அன்னை தெரேசா பற்றி, அன்பின் துளி – அன்னை தெரேசாவின் நினைவுகள் என்ற தலைப்பில் தமிழிலும், A Drop of Love என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் அன்னை தெரேசா பற்றி நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவர், ஹரியானா மாநிலத்தில் இருபது ஆண்டுகள், இந்திய ஆட்சிப் பணியில் (IAS அதிகாரி) இருந்து ஓய்வுபெற்றவர். இவர், அந்த ஆட்சியர் பணிக்காலத்தில் புனித அன்னை தெரேசா அவர்களை, பலமுறை சந்தித்திருக்கின்றார். கன்னியாகுமரி மாவட்டம் வட்டக்கரையில் பிறந்த திருவாளர் எம்.ஜி.தேவசகாயம் அவர்கள், அந்த நூல் பற்றி வாட்சப் வழியாக எம்மோடு பகிர்ந்துகொண்டார்.

நேர்காணல்: அன்பின் இலக்கணம், அன்னை தெரேசா – திரு.எம்.ஜி.தேவசகாயம்
03 September 2020, 14:29