நேர்காணல்: அன்னை மரியா மீது உண்மையான பக்தி- 1
அருள்பணி முனைவர் டெனிஸ் அவர்கள், அகில உலக பாப்பிறை மரியியல் நிறுவனத்தில் ஆலோசகராகவும், ஆசியக் கண்டத்தில் மரியியல் அமைப்புகளுக்குப் பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
மேரி தெரேசா: வத்திக்கான்
மரியின் ஊழியர் சபையின் அருள்பணி முனைவர் டெனிஸ் அவர்கள், உரோம் நகரில், மரியானும் எனப்படும், பாப்பிறை மரியியல் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றுகிறவர். அதோடு இவர், அகில உலக பாப்பிறை மரியியல் நிறுவனத்தில் ஆலோசகராகவும், ஆசியக் கண்டத்தில் மரியியல் அமைப்புகளுக்குப் பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். வத்திக்கானிலுள்ள அகில உலக பாப்பிறை மரியியல் நிறுவனம், செப்டம்பர் 18, கடந்த வெள்ளிக்கிழமையன்று, அன்னை மரியா பக்தி பற்றி, கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அருள்பணி முனைவர் டெனிஸ் அவர்கள், இன்று அந்த கூட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார்.
24 September 2020, 14:50