தேடுதல்

Vatican News
சுவாசிக்கும் கருவிகள் சுவாசிக்கும் கருவிகள்   (AFP or licensors)

பங்களாதேஷில், திருத்தந்தை அனுப்பிய சுவாசிக்கும் கருவிகள்

கோவிட் 19 கொள்ளைநோயின் தாக்கங்களை எதிர்கொள்ள, பங்களாதேஷ் நாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிவைத்துள்ள மூன்று சுவாசிக்கும் கருவிகள் பெரிதும் உதவியாக உள்ளன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் 19 கொள்ளைநோயின் தாக்கங்களை எதிர்கொள்ள, பங்களாதேஷ் நாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிவைத்துள்ள மூன்று சுவாசிக்கும் கருவிகள் பெரிதும் உதவியாக உள்ளன என்று அந்நாட்டின் அருள்பணியாளர் ஒருவர், பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

பங்களாதேஷ் நாட்டில் உள்ள புனித ஜான் வியான்னி மருத்துவமனையின் இயக்குனர், அருள்பணி Kamal Corraya அவர்கள், தங்கள் மருத்துவமனைக்கும், மற்றும், தங்கள் நாட்டில், Dinajpur, Jessore ஆகிய இரு நகரங்களில் இயங்கிவரும் கத்தோலிக்க மருத்துவமனைகளுக்கும், திருத்தந்தை, சுவாசிக்கும் கருவிகளை அனுப்பியுள்ளதாகக் கூறினார்.

இந்த சுவாசிக்கும் கருவிகள், மருத்துவமனைகளிலும், இன்னும், தனித்து விடப்பட்டுள்ள நோயாளிகளின் இல்லங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன என்று, அருள்பணி Corraya அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இந்தக் கருவிகள், அவரது அன்பையும், அருகாமையையும் வெளிப்படுத்துவதோடு, தங்களை நம்பிக்கையுடன் வாழ்வதற்கு அவர் வழங்கும் அழைப்பாகவும் உள்ளன என்று, புனித ஜான் வியான்னி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர், Edward Pallab Rozario அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

பங்களாதேஷ் நாட்டில், 12 மருத்துவமனைகள், 78 மருந்தகங்கள், 6 தொழுநோயாளர் மருத்துவமனைகள், மற்றும் 15 முதியோர் காப்பகங்கள், கத்தோலிக்கர்களால் நடத்தப்படுகின்றன என்று பீதேஸ் செய்தி கூறுகிறது. (Fides)

09 September 2020, 14:53