தேடுதல்

திருச்சிலுவை திருச்சிலுவை 

ரொமேரோ அருள்பணித்துவ கல்லூரி தலைவர் கொலை

புனித ஆஸ்கர் ரொமேரோ அவர்களும், அருள்சகோதரர் Cosme Spessotto அவர்களும், வட அமெரிக்காவின் நான்கு அருள்சகோதரிகளும், மறைசாட்சிய வாழ்வைச் சந்தித்ததன் 40ம் ஆண்டு, 2020ம் ஆண்டில் நினைவுகூரப்படுகின்றது

மேரி தேரேசா: வத்திக்கான் செய்திகள்

சான் சால்வதோர் நகரில் உள்ள புனித ஆஸ்கர் ரொமேரோ அருள்பணித்துவ கல்லூரியின் தலைவர், அருள்பணி Ricardo Antonio Cortez அவர்கள், கொடூரமாய் கொலைசெய்யப்பட்டிருப்பது குறித்து, தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார், அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர்.

எல் சால்வதோர் நாட்டின், Zacatecoluca மறைமாவட்டத்திலுள்ள ரொமேரோ அருள்பணித்துவ கல்லூரியின் தலைவர் அருள்பணி Cortez அவர்கள் கொலைசெய்யப்பட்டிருப்பது குறித்து, ஆகஸ்ட் 07, இவ்வெள்ளியன்று கண்டன அறிக்கை வெளியிட்ட, அம்மறைமாவட்ட ஆயர் Elías Samuel Bolaños Avelar அவர்கள், இவரின் இறப்பு குறித்து, தன் மறைமாவட்டத்திலுள்ள அனைவரும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.  

அருள்பணி Cortez அவர்கள், தான் பணியாற்றிய விசுவாசிகள் மீதும், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள் மீதும், மிகவும் அன்புகொண்டிருந்த நல்ல மனிதர் என்று கூறியுள்ள ஆயர் Avelar அவர்கள், அருள்பணி Cortez அவர்கள், எதிர்பாராதநேரத்தில், மிகவும் கொடூரமாய் கொலைசெய்யப்பட்டிருப்பதை, வார்த்தைகளால் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

நல்ல அருள்பணியாளர்களின் மாசற்ற இரத்தம், இந்த எல் சால்வதோர் மண்ணை மீண்டும் ஈரப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ள ஆயர் Avelar அவர்கள், புனித ஆஸ்கர் ரொமேரோ அவர்களும், அருள்சகோதரர் Cosme Spessotto அவர்களும், வட அமெரிக்காவின் நான்கு அருள்சகோதரிகளும், மறைசாட்சிய வாழ்வைச் சந்தித்ததன் 40ம் ஆண்டு, இந்த 2020ம் ஆண்டில் நினைவுகூரப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

தன் ஆடுகளுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்திருந்த நல்ல மேய்ப்பரின் மாசற்ற குருதியால், நம் மறைமாவட்டம், மீண்டும் ஒருமுறை நனைந்துள்ளது என்றும் கூறியுள்ள ஆயர் Avelar அவர்கள், அருள்பணி Cortez அவர்களின் கொலை குறித்த புலன் விசாரணை இடம்பெறுமாறு, அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2020, 13:59