தேடுதல்

Vatican News
உரோம் நகரில் அமைந்துள்ள இறை இரக்க கோவிலில் திருத்தந்தை உரோம் நகரில் அமைந்துள்ள இறை இரக்க கோவிலில் திருத்தந்தை   (AFP or licensors)

இறை இரக்க தியானம் - கணனி வழியே, முதல்முறையாக...

போலந்து நாட்டில் அமைந்துள்ள இறை இரக்க திருத்தலத்தில், செப்டம்பர் 3, வருகிற வியாழன் முதல், 6ம் தேதி முடிய, இறை இரக்க தியானம் ஒன்று, கணனி வழியே நிகழ்நிலை முறையில் நடத்தப்படும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

போலந்து நாட்டின் வாகிவ்னீக்கி (Łagiewniki) என்ற நகரில் அமைந்துள்ள இறை இரக்க திருத்தலத்தில், செப்டம்பர் 3, வருகிற வியாழன் முதல், 6ம் தேதி முடிய, இறை இரக்க தியானம் ஒன்று, கணனி வழியே நிகழ்நிலை முறையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Faustinum கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தியானத்தை, வேல்ஸ் நாட்டின் Morriston நகரில் அமைந்துள்ள இறை இரக்க திருத்தலத்தின் பொறுப்பாளரான அருள்பணி ஜேசன் ஜோன்ஸ் அவர்களும், பிரித்தானியாவில் பணியாற்றும் இரக்கத்தின் அன்னை அருள் சகோதரிகளும் ஆங்கில மொழியில் வழிநடத்துவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகிவ்னீக்கி இறை இரக்க திருத்தலத்திலிருந்து YouTube வழியே நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் இந்த தியான உரைகளையும், ஏனைய வழிபாட்டு நிகழ்வுகளையும் மக்கள் நேரடியாகவோ, அல்லது, தாமதமாகவோ காணமுடியும் என்றும் இத்திருத்தலம் அறிவித்துள்ளது.

கணனி வழியே நிகழ்நிலை முறையில் முதன்முதலாக நடத்தப்படும் இறை இரக்க தியானம் இதுவென்றும், தியானத்தில் பங்கேற்க விரும்புவோர், formation@faustinum.pl  என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (ICN)

27 August 2020, 13:10