தேடுதல்

Vatican News
பெல்ஜியம் கோவில் ஒன்றில் பெல்ஜியம் கோவில் ஒன்றில்   (ANSA)

வயதானவர்கள் திருமுழுக்குப் பெறுவது அதிகரிப்பு

பெல்ஜியம் நாட்டில், குழந்தைப்பருவத்தில், திருமுழுக்கு பெறாமல் போனவர்கள், தற்போது, வளர்ந்தபின் திருமுழுக்குப்பெறும் ஆர்வத்தை வெளியிட்டு, திருமுழுக்குப் பெற்றுவருகின்றனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வயதானவர்கள் திருமுழுக்குப் பெறும் போக்கு, பெல்ஜியம் நாட்டில், கடந்த பத்தாண்டுகளில், இருமடங்காகியுள்ளது என்று, அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

2010ம் ஆண்டு, 143 பெரியவர்கள், திருமுழுக்குப் பெற்றிருந்த நிலையில், இவ்வாண்டில் இவ்வெண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளது.

பெல்ஜியம் நாட்டின் 1 கோடியே 15 இலட்சம் மக்கள் தொகையில், பெரும்பான்மையினர் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர்கள் எனினும், ஞாயிறு திருப்பலிக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை, 7 விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ள நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்குவதும் குறைந்து வருகிறது.

தங்கள் பெற்றோர்களால் குழந்தைப்பருவத்தில், திருமுழுக்கு பெறாமல் போனவர்கள், தற்போது, வளர்ந்தபின் திருமுழுக்குப்பெறும் ஆர்வத்தை வெளியிட்டு, திருமுழுக்குப் பெற்றுவருகின்றனர்.

இவ்வாறு திருமுழுக்கு பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, பெல்ஜியம் திருஅவைசெய்திகள் கூறுகின்றன. (ICN)

24 August 2020, 14:19