தேடுதல்

Vatican News
ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் Jean-Claude Hollerich ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் Jean-Claude Hollerich  (Archeveche de Luxembourg / SCP)

ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் மகிழ்வு

கொரோனா கொள்ளைநோயிலிருந்து மீண்டுவருவதற்கு உதவியாக, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாட்டுத் தலைவர்கள், 20,000 கோடி யூரோக்கள் நிதியை ஒதுக்கியிருப்பது குறித்து, ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் மகிழ்வு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா கொள்ளைநோயிலிருந்து மீண்டுவரும் காலக்கட்டத்தில், ஐரோப்பிய நாடுகளுக்கு உதவி செய்யும் வகையில், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாட்டுத் தலைவர்கள், 20,000 கோடி யூரோக்கள் நிதியை ஒதுக்கியிருப்பது குறித்து, ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பு தன் மகிழ்வை வெளியிட்டுள்ளது.

இந்த நிதியை அறிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த, ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் Jean-Claude Hollerich அவர்கள், இத்தகைய தீர்மானம், ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலவும் ஒருமைப்பாட்டை உலகிற்கு உணர்த்துகிறது என்று கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மிக நலிவுற்ற நாடுகள் மீண்டும் தலைநிமிர இந்த நிதி ஒதுக்கீடு வழிவகுக்கும் என்றும், இத்தகைய ஒதுக்கீட்டால், அடுத்த தலைமுறை நிம்மதியாக தங்கள் வாழ்வைத் தொடரமுடியும் என்றும், கர்தினால் Hollerich அவர்கள், கூறினார்.

2021ம் ஆண்டு முதல், 2027 ஆம் ஆண்டு முடிய உள்ள ஏழு ஆண்டுகளில் கொள்ளைநோய் மீட்பு, பொருளாதார மீட்பு ஆகிய செயல்பாடுகளுக்கு இந்த நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

22 July 2020, 13:50