தேடுதல்

EU எனப்படும் ஐரோப்பிய ஒன்றிய அவைக்கு, தலைமைப்பொறுப்பை ஏற்கும் ஜெர்மனி EU எனப்படும் ஐரோப்பிய ஒன்றிய அவைக்கு, தலைமைப்பொறுப்பை ஏற்கும் ஜெர்மனி 

நீதி நிறைந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப EU அவைக்கு அழைப்பு

ஐரோப்பா, தன் தொழில்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், சமுதாயத்தில் மிகவும் நலிந்த மக்களின் வாழ்வு மீதும் அக்கறை காட்டவேண்டும் - ஐரோப்பிய கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நீதியிலும், நீடித்த நிலையான வளர்ச்சியிலும், ஐரோப்பா, மேலும் அதிகமதிகமாக உறுதிபெற, ஜெர்மன் நாடு உதவுமாறு, ஐரோப்பிய கிறிஸ்தவ ஒன்றிப்பு குழு ஒன்று வலியுறுத்தியுள்ளது.

“ஐரோப்பாவின் மீட்புக்கு ஒன்றிணைந்து” என்ற இலக்குடன், EU எனப்படும் ஐரோப்பிய ஒன்றிய அவைக்கு, தலைமைப்பொறுப்பை ஏற்கும் ஜெர்மனிக்கு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது, ஐரோப்பிய கத்தோலிக்க மற்றும், ஏனைய கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களைக் கொண்ட குழு.  

ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு (COMECE) மற்றும், ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகள் அவை (CEC) ஆகிய இரண்டு அமைப்புகளின் பிரதிநிதிகள், இவ்வாரத்தில், Brussels நகரில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜெர்மன் நாட்டு பிரதிநிதி Michael Clauss அவர்களைச் சந்தித்து, தங்களது விருப்பத்தைத் தெரிவித்தனர்.

கோவிட்-19 கொள்ளைநோயால், ஐரோப்பிய அரசியல், பொருளாதாரம் மற்றும் சமுதாயங்கள் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள இவ்வேளையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வருங்காலத்தை கட்டியெழுப்பவேண்டிய முக்கியமானக் கட்டத்தில் ஜெர்மன் நாடு, தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது என்றும், அந்தக் குழு கூறியது.

ஐரோப்பா, தன் தொழில்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், சமுதாயத்தில் மிகவும் நலிந்த மக்களின் வாழ்வு மீதும் அக்கறை காட்டவேண்டும் என்றும், அந்த கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழு கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 July 2020, 12:44