தேடுதல்

அருள்பணி ஆமா சாமி சே.ச. அருள்பணி ஆமா சாமி சே.ச. 

நேர்காணல் – சென் தியான முறை - பகுதி 1

அருள்பணி ஆமா சாமி சே.ச. அவர்கள் இந்தியா ஜெர்மனி, ஆஸ்திரேலியா, செக் குடியரசு, அமெரிக்க ஐக்கிய நாடு போன்ற நாடுகளில் சென் ஆசிரியர்களை உருவாக்கியிருக்கிறார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

அருள் மரியா ஆரோக்யசாமி என்ற இயற்பெயரைக் கொண்ட இயேசு சபை அருள்பணியாளர் ஆமா சாமி (Gen-Un Ken) அவர்கள், ஜப்பானில் Yamada Ko-Un என்ற சென் ஆசிரியரிடம் சென் தியானமுறையை கற்றுத்தேர்ந்து, அதை இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் கற்றுக்கொடுத்து வருகிறார். தமிழகத்தின் கொடைக்கானல் மலையில், பெருமாள் மலை என்ற பகுதியில், போதி சங்கா (Bodhi Sangha) என்ற ஆசிரமத்தை உருவாக்கி, அவ்விடத்தில் சென் தியானம் பற்றி கற்றுக்கொடுத்து வருகிறார். இந்தியா ஜெர்மனி, ஆஸ்திரேலியா, செக் குடியரசு, அமெரிக்க ஐக்கிய நாடு போன்ற நாடுகளில் சென் ஆசிரியர்களை உருவாக்கியிருக்கிறார். இன்று அருள்பணி ஆமா சாமி சே.ச. அவர்கள் சென் தியான முறை பற்றி பகிர்ந்துகொள்கிறார்.

நேர்காணல் – சென் தியான முறை - பகுதி 1
11 June 2020, 09:41