தேடுதல்

Vatican News
பெருமாள்மலையில் சென் தியான  மையம் பெருமாள்மலையில் சென் தியான மையம் 

நேர்காணல் – சென் தியான முறைகள் – பகுதி 2

இயேசு சபை அருள்பணி ஆமா சாமி அவர்கள், கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தின் கொடைக்கானல் மலையிலுள்ள, பெருமாள்மலை என்ற பகுதியில், போதி சங்கா என்ற மையத்தை உருவாக்கி, சென் தியான முறையை கற்றுக்கொடுத்து வருகிறார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

அருள் மரியா ஆரோக்யசாமி என்ற இயற்பெயரைக் கொண்ட இயேசு சபை அருள்பணி ஆமா சாமி (Gen-Un Ken) அவர்கள், ஜப்பானில் Yamada Ko-Un எனப்படும் சென் ஆசிரியரிடம் சென் தியானமுறையை கற்று, அதை இந்தியாவிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் கற்றுக்கொடுத்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தின் கொடைக்கானல் மலையிலுள்ள, பெருமாள்மலை என்ற பகுதியில், போதி சங்கா என்ற மையத்தை உருவாக்கி, சென் தியான முறையைக் கற்றுக்கொடுத்து வருகிறார். இயேசு சபை அருள்பணி ஆமா சாமி அவர்கள் தனக்கு, சென் தியான முறையில் எவ்வாறு ஆர்வம் வந்தது, அதை எவ்வாறு கற்றார் என்பது பற்றி வத்திக்கான் வானொலியில் ஏற்கனவே பகிர்ந்துகொண்டார். அதைத் தொடர்ந்து இன்று.... 

நேர்காணல் – சென் தியான முறைகள் – பகுதி 2
18 June 2020, 11:57