தேடுதல்

இறை ஊழியர் ஜோசப் லூயிஸ் இரவேல் இறை ஊழியர் ஜோசப் லூயிஸ் இரவேல் 

நேர்காணல்: இறை ஊழியர் ஜோசப் லூயிஸ் இரவேல்

பிரான்ஸ் நாட்டு மறைப்பணியாளரான அருள்பணி ஜோசப் லூயிஸ் இரவேல் அவர்கள், 2020ம் ஆண்டு சனவரி மாதம் 14ம் நாள், கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை திருத்தலம் பசிலிக்காவில் நடைபெற்ற சிறப்பு ஆடம்பரத் திருப்பலியில், இறை ஊழியர் என அறிவிக்கப்பட்டார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

பிரான்ஸ் நாட்டு மறைப்பணியாளரான அருள்பணி ஜோசப் லூயிஸ் இரவேல் அவர்கள், 2020ம் ஆண்டு சனவரி மாதம் 14ம் நாள், கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை திருத்தலம் பசிலிக்காவில் நடைபெற்ற சிறப்பு ஆடம்பரத் திருப்பலியில், இறை ஊழியர் என அறிவிக்கப்பட்டார். 1824ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி பிறந்த இவர், MEP எனப்படும், வெளிநாட்டு மறைபோதகர் சபையில் சேர்ந்து, 1848ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்டார். தென்னிந்தியாவிற்கு மறைப்பணியாற்ற வந்த இவர், 1853ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி, கோயம்புத்தூர்  பிரான்சிஸ்குவின் காணிக்கை அன்னை சகோதரிகள் சபையை நிறுவினார். இச்சபை சகோதரிகள், இன்று, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், இத்தாலி, பிரான்ஸ், சாம்பியா, அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் மறைப்பணியாற்றி வருகின்றனர். இன்று இச்சபையின் அருள்சகோதரி மார்ட்டினா அல்போன்ஸ் மேரி அவர்கள், இறைஊழியர் ஜோசப் லூயிஸ் இரவேல் அவர்கள் பற்றியும், அவர் ஆரம்பித்த சபை பற்றியும் பகிர்ந்துகொள்கிறார்

நேர்காணல்: இறை ஊழியர் ஜோசப் லூயிஸ் இரவேல்
04 June 2020, 11:25