தேடுதல்

Vatican News
நைஜீரியாவில்  கிறிஸ்தவர்கள் பேரணி நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் பேரணி  (AFP or licensors)

ஆப்ரிக்காவில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரிப்பு

ஆப்ரிக்கக் கண்டத்தில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்துவரும்வேளை, அக்கண்டமே, 2019ம் ஆண்டில், ACN கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் உதவிகளை அதிகமாகப் பெற்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆப்ரிக்கக் கண்டத்தில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்துவரும்வேளை, 2019ம் ஆண்டில், தனது அமைப்பின்  உதவிகளை அதிகமாகப் பெற்ற கண்டம் ஆப்ரிக்கா என்று, கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

தேவையில் இருக்கும் திருஅவைகளுக்கு உதவிவரும் ACN எனப்படும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, கடந்த ஆண்டில், நைஜீரியா நாட்டில் மட்டும், ஆயிரத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் கொலைசெயப்பட்டுள்ளனர் என்றும், Boko Haram எனப்படும் இஸ்லாம் பயங்கரவாதக் குழுவினால், நைஜீரியாவில் கிறிஸ்மஸ் பெருவிழா நாளில் மட்டும் 11 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், அதே குழுவினால் நைஜீரியாவின் அண்டை நாடான காமரூனில் ஏழு பேர் இறந்தனர் மற்றும், 21 பேர் பிணையலில் எடுத்துச்செல்லப்பட்டதை தான் பார்த்ததாக, Yaouga மறைமாவட்ட ஆயர் Barthélemy Yaouda Hourgo அவர்கள் கூறினார் என்றும், ACN அமைப்பு கூறியது.

Boko Haram குழுவினர், Blablim என்ற தனது கிராமத்தில், தனது குடும்பத்தில் ஓர் இளைஞரைக் கொலைசெய்து, அந்த கிராமம் முழுவதையும் சூறையாடிச் சென்றனர் எனவும், தற்போது அந்த கிராம் முற்றிலும் அழிந்துவிட்டது எனவும், ஆயர் Yaouda Hourgo அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருப்பலி கருத்துக்களுக்காக ஆப்ரிக்காவின் அருள்பணியாளர்களுக்கு ACN அமைப்பு வழங்கும் பணம், பெரிய உதவியாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. (Zenit)

27 June 2020, 13:35