தேடுதல்

ஏதென்சில் புலம்பெயர்ந்தோர் ஏதென்சில் புலம்பெயர்ந்தோர் 

கோவிட்-19 பொருளாதாரப் பிரச்சனையை கடுமையாக்கியுள்ளது

ஐ.எஸ் இஸ்லாமிய அரசு, ஈராக்கின் பொருளாதார, சமுதாய மற்றும், அரசியல் பலவீனத்தை தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு, நாட்டின் சில பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது

மேரி தெரேசா:  வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டில் கொரோனா தொற்றுக்கிருமி பரவலால் உருவாகியுள்ள பொருளாதாரப் பிரச்சனை, குற்றங்கள் அதிகரிப்பதற்குத் தூண்டுதலாக உள்ளது என்று, அந்நாட்டின் குர்த் இனத்தவர் வாழ்கின்ற பகுதியின் Amadiy மறைமாவட்டம் கவலை தெரிவித்துள்ளது.

Amadiy மறைமாவட்டத்தின் Enishke பங்குத்தந்தை அருள்பணி Samir Youssef அவர்கள், அப்பகுதியின் இப்போதைய நிலவரம் பற்றி ஆசியச் செய்தியிடம் விளக்கியபோது, கொரோனா கிருமித் தொற்றைவிட, அதனால் உருவாகியிருக்கும் பசிப் பிரச்சனை மிகவும் கொடூரமாகியுள்ளது என்று கூறினார்.

அப்பகுதியில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனையால் வேலையிழந்துள்ள மற்றும், வருங்காலம் பற்றிய நம்பிக்கையை இழந்துள்ள இளைஞர்களை, பயங்கரவாதக் குழுக்கள் தங்கள் படைப்பிரிவில் சேர்க்கும் என்று தான் அஞ்சுவதாகத் தெரிவித்தார், அருள்பணி Samir Youssef.

உண்மையில், ஐ.எஸ் இஸ்லாமிய அரசு, ஈராக்கின் பொருளாதார, சமுதாய மற்றும், அரசியல் பலவீனத்தை தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு, நாட்டின் சில பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது என்றும், அருள்பணி Youssef அவர்கள் கூறினார்.

மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா மற்றும், உலகின் எல்லாப் பகுதிகளிலும், ஐ.எஸ் அமைப்பு, அல்கெய்தா அமைப்பு போன்ற பயங்கரவாதக் குழுக்கள், தாக்குதல்களை நடத்துவதற்கு, நலிவடைந்த சமுதாய மற்றும், பொருளாதாரத்திற்காக காத்திருக்கின்றன என்றும் அருள்பணி Youssef அவர்கள் கூறினார்.

கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடிநிலை, பயங்கரவாதத்திற்கெதிராகப் போராடுவதற்கு திறனைக் குறைத்துள்ளது என்று கூறிய அந்த பங்குத்தந்தை, இந்நிலை ஈராக்கில் மட்டுமல்ல, உலகின் ஏனைய பகுதிகளிலும் நிலவுகின்றது என்பதையும், கவலையோடு குறிப்பிட்டார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2020, 15:12