தேடுதல்

லெபனானில் பாஸ்கா  லெபனானில் பாஸ்கா  

அரசின் தீர்மானங்கள் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க..

கர்தினால் Beshara Al-Rahi : அரசின் முயற்சிகளுக்கு ஆதரவு தரவேண்டியது குடிமக்களின் கடமை, அதேவேளை, குடிமக்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாது என்பதை உறுதி செய்யவேண்டியதும் அரசின் கடமை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

தவறு செய்த அரசியல்வாதிகளே தங்கள் தவறுகளைத் திருத்தி, பொருளாதாரத்தை சரிசெய்யவேண்டுமேயொழிய, அப்பாவி பொதுமக்களை மேலும் சிரமப்படுத்தக் கூடாது என லெபனான் நாட்டு கிறிஸ்தவ மதத்தலைவர்கள் அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர்.

பொதுமக்களின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை அரசு எடுக்க உள்ளதாக செய்திகள் பரவியதைத் தொடர்ந்து, இச்செய்தியை வெளியிட்ட லெபனான் கிறிஸ்தவத் தலைவர்கள், வங்கிகளுக்கும் அரசுக்கும் இடையே இடம்பெற்றுவரும் இந்த மோதலில், இழப்படைபவர்கள் பொது மக்களாக இருக்கக்கூடாது எனவும் கூறியுள்ளனர்.

லெபனான் நாட்டின் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண முடியாமல், பிரதமர் Hassan Diabன் அரசு திணறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், மக்களின் வளமான வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக ஒவ்வொரு முடிவும் இருக்க வேண்டும் என கிறிஸ்தவத் தலைவர்கள் எடுத்தியம்பியுள்ளனர்.

மக்களின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்துக்கொள்வது என கடந்த வாரத்தில் லெபனான் அமைச்சரவை கூடி விவாதித்ததைத் தொடர்ந்து, மக்களின் எதிர்ப்பு அதிகரித்துள்ளதால், வங்கிக் கணக்கு வைத்திருப்போரில் 98 விழுக்காட்டினர் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என தற்போது அரசு உறுதி வழங்கியுள்ளது.

லெபனானின் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை  வெளியிட்ட மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் Beshara Al-Rahi அவர்கள், அரசின் முயற்சிகளுக்கு ஆதரவு தரவேண்டியது குடிமக்களின் கடமை, அதேவேளை, குடிமக்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாது என்பதை உறுதி செய்யவேண்டியதும் அரசின் கடமை என்று கூறினார்.

இதற்கிடையே, அரசியல் நெருக்கடிகளால் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கும் லெபனான் நாடு, கோவிட-19 கொள்ளை நோய் பிரச்சனையால் மேலும் பெரிய அளவில் பொருளாதார நெருக்கடிகளைòd சந்திக்கும் என்ற அச்சத்தை IMF எனும் உலக நிதி நிறுவனம் வெளியிட்டுள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 April 2020, 15:02