தேடுதல்

Vatican News
கோவிட்-19 சூழலில் டெல்லி அரசின் இலவச உணவு கோவிட்-19 சூழலில் டெல்லி அரசின் இலவச உணவு  (AFP or licensors)

கோவிட்-19 சூழலும், புனித வார வழிபாடுகளும்

நாம் நம் குடும்பத்திற்குச் சமையல் பொருள்கள் வாங்கும்போது கூடக்கொஞ்சம் வாங்கி கஷ்டப்படும் குடும்பங்களுக்குக் கொடுக்கலாம். ஒன்றும் உதவி செய்ய இயலாதவர்கள், வறுமையில் வாடுவோரின் பெயர்களைப் பங்குத் தந்தையிடம் கொடுக்கலாம் – ஆயர் எஸ்.அந்தோனிசாமி

மேரி தெரேசா: வத்திக்கான்

கோவிட்-19 தொற்றுக்கிருமி பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் நாடுகள் மேற்கொண்டுள்ள சமுதாய தனித்திருக்கும் முறையை, உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையும் கடைப்பிடித்து வருகிறது. தலத்திருஅவைகளின் தலைவர்கள் தங்களின் மறைமாவட்ட விசுவாசிகளுக்கு அறிக்கைகள் மற்றும், சமுதாய ஊடகங்கள் வழியாக, வழிகாட்டுதல்களைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஏப்ரல் 5, வருகிற ஞாயிறன்று துவங்கும் புனித வாரத்திற்கு ஆயர்கள் பலர் வழங்கியுள்ள வழிமுறைகளை யூடியூப்பில் கேட்க முடிந்தது. பாளையங்கோட்டை மறைமாநில ஆயர் மேதகு எஸ்.அந்தோனிசாமி அவர்கள், தன் மறைமாநில மக்களுக்கு வழங்கியதை, வத்திக்கான் வானொலி நேயர்களுக்கும் வாட்சப் வழி வழங்கினார். நமது பங்கில், நமது அன்பியத்தில், நமது வீடுகளுக்கு அருகில் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு உதவ முன்வருவோம் என்று ஆயர். எஸ்.அந்தோனிசாமி அவர்கள் பரிந்துரைத்துள்ளார்.

கோவிட்-19 சூழலும், புனித வார வழிபாடுகளும்
02 April 2020, 12:14