தேடுதல்

Vatican News
போலந்து திருஅவைத் தலைவர்கள் போலந்து திருஅவைத் தலைவர்கள்   (ADAN STEPIEN-511404463)

பிறரன்பு பணிகளிலும் ஆன்மிகப்பணிகளிலும் அருள்சகோதரிகள்

கொரோனா தொற்றுநோய் காலத்தில் போலந்தில், பெரும்பான்மையான அருள்சகோதரிகள், முதியோர், தனிமையில் வாடுவோர், மற்றும், வீடற்றோரிடையான பணிகளில் தங்களை ஈடுபடுத்தியுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்த கொரோனா தொற்றுநோய்க் காலத்தில் போலந்து நாட்டில் மருத்துவமனைகள், பராமரிப்பு இல்லங்கள், பள்ளிகள், முகக் கவச தயாரிப்பு மையங்கள் என பல்வேறு பணித்தளங்களில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அருள்சகோதரிகள் தங்களை ஈடுபடுத்தியுள்ளதாக தலத்திருஅவை அறிவிக்கிறது.

இத்துயரமான காலக்கட்டத்தில் பெரும்பான்மையான அருள்சகோதரிகள், முதியோர், தனிமையில் வாடுவோர், மற்றும், வீடற்றோரிடையான பணிகளில் தங்களை ஈடுபடுத்தியுள்ளதாகக் கூறும் திருஅவை அதிகாரிகள், தனிமையில் வாடும் மக்களுக்கு உணவு தயாரிப்பதிலும், நோய் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டு ஊக்கமளிப்பதிலும், அருள்சகோதரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பொலந்து நாட்டு அருள் சகோதரிகள் இத்தகைய பிறரன்பு பணிகளை மேற்கொள்வதுடன் நிற்காமல், இந்நோய் முடிவடையவேண்டும் எனவும், நோயாளிகள், மற்றும், மருத்துவப்பணியாளர்களுக்காகவும் தினமும் செபித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 April 2020, 14:44