தேடுதல்

Vatican News
செனகல் நாட்டில் சூழலியல் பாதுகாப்பு செனகல் நாட்டில் சூழலியல் பாதுகாப்பு   (AFP or licensors)

அவசரகால நிதி திட்டத்தை துவக்கும் செனகல் ஆயர்கள்

வெளியுதவிகளைச் சார்ந்திராமல், உள்நாட்டு உதவிகளைக்கொண்டு கத்தோலிக்க அவசரகால நிதி திட்டத்தை செயலாற்றத் திட்டமிட்டுள்ளனர் - செனகல் ஆயர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

செனகல் நாட்டில் இயற்கை பேரிடர்களாலும், மனிதகுல நெருக்கடிகளாலும் பாதிக்கப்பட்டுள்ளோரின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கத்தில் கத்தோலிக்க அவசரகால நிதி ஒன்றை துவக்க உள்ளதாக, அந்நாட்டு ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

இம்மாதம் 7ம் தேதி முதல் 22ம் தேதி வரை, செனகல்  நாடு முழுவதும் மக்களிடையே திரட்டப்படும் நிதியைக்கொண்டு இந்த அவசரகால நிதித் திட்டம் துவக்கப்படும் என அறிவித்துள்ள ஆயர்கள், வெளியுதவிகளைச் சார்ந்திராமல், உள்நாட்டு உதவிகளைக்கொண்டு இத்திட்டத்தை செயலாற்றத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்தனர்.

இயற்கை பேரிடர்களாலும், மனிதாபிமான நெருக்கடிகளாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ, அந்நாட்டு ஆயர்களின் ஊக்குவிப்புடன், செனகல் காரித்தாஸ் அமைப்பின் உதவியுடன் துவக்கப்பட உள்ள இத்திட்டம், ” நமக்கு நாமே உதவுவோம்” என்ற குறிக்கோளை மையமாகக் கொண்டுள்ளது.

03 March 2020, 14:45