தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வு 

நேர்காணல்: என்னைக் கவர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, தனது 76வது வயதில் திருவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

மேரி தெரேசா – வத்திக்கான்

ஹோர்கே மாரியோ பெர்கோலியோ (Jorge Mario Bergoglio) என்ற இயற்பெயரைக் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி, அர்ஜென்டீனா நாட்டின் புவனோஸ் அய்ரஸ் நகரில் பிறந்தார். இவர் 1958ம் ஆண்டில் இயேசு சபையில் சேர்ந்து, 1969ம் ஆண்டு அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1973ம் ஆண்டு முதல், 1979ம் ஆண்டு வரை, அர்ஜென்டீனா இயேசு சபை மாநில அதிபராகப் பணியாற்றிய இவர், 1998ம் ஆண்டில் புவனோஸ் அய்ரஸ் உயர்மறைமாவட்ட பேராயராகவும், 2001ம் ஆண்டில் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார். கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அவர்கள், 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி திருவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தாலியின் அசிசி நகர் புனித பிரான்சிஸ் மீது வைத்திருந்த நன்மதிப்பால், பிரான்சிஸ் என்ற பெயரையும் ஏற்றார், கர்தினால் பெர்கோலியோ. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 13, இவ்வெள்ளியன்று, திருஅவையின் தலைமைப்பணியில் ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதையொட்டி, திருத்தந்தையின் இத்தலைமைப்பணி பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார், அருள்பணி முனைவர் சேவியர் ஜெயராஜ், இயேசு சபை. கொல்கத்தா இயேசு சபை மாநிலத்தைச் சேர்ந்த இவர், உரோம் இயேசு சபை உலகளாவிய தலைமையகத்தில் இயங்கும், சமுதாய நீதி, சுற்றுச்சூழல் நீதி துறையின் இயக்குனர் ஆவார்.  

நேர்காணல்: என்னைக் கவர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ்
12 March 2020, 14:51