தேடுதல்

Vatican News
சீனாவின் உஹான் நகரிலிருந்து புது டெல்லிக்கு கொணரப்பட்ட 76 இந்தியர்களும், 36 வெளி நாட்டவரும்.  இவர்களில் எவருக்கும் தொற்று நோய் பாதிப்பில்லை சீனாவின் உஹான் நகரிலிருந்து புது டெல்லிக்கு கொணரப்பட்ட 76 இந்தியர்களும், 36 வெளி நாட்டவரும். இவர்களில் எவருக்கும் தொற்று நோய் பாதிப்பில்லை  (ANSA)

கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோருக்கு வலைத்தளம்

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்கள், இந்நோயைக் குறித்து விவாதிக்கவும், மற்றவர்களுடன் உரையாடவும், மின்னஞ்சல் அனுப்பவும், www.coronacare.life என்ற வலைத்தளப் பக்கத்தை, CHAI துவக்கியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா (Corona) தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டு, தனிமையில் வைக்கப்பட்டிருக்கும் மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவித்து, அவர்களுக்கு உதவும் நோக்கத்தில், இந்தியத் தலத்திருஅவை, வலைத்தளப் பக்கம் ஒன்றைத் துவக்கியுள்ளது.

ஆந்திராவின் ஹைதராபாத் நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் CHAI (Catholic Health Association of India) எனப்படும் இந்தியக் கத்தோலிக்க நலக்கழகத்தினால், www.coronacare.life என்ற வலைத்தள முகவரியுடன், இப்பக்கம் துவக்கப்பட்டுள்ளது.

இந்நோயால் பாதிக்கப்பட்டு, தன்மைப்படுத்தப்பட்டிருக்கும் மக்கள், இந்நோயைக் குறித்து விவாதிக்கவும், மற்றவர்களுடன் உரையாடவும், மின்னஞ்சல் அனுப்பவும், இப்பக்கத்தில் அனைத்து வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

சுயவிருப்பப் பணியாளர்கள் முப்பது பேருடன் இயங்கிவரும் இந்த வலைத்தளப் பக்கம் பற்றி குறிப்பிட்ட CHAI கழகத்தின் இயக்குனர், மாத்யூ ஏப்ரகாம் (Matthew Abraham) அவர்கள், இந்நோயாளிகள் கொண்டிருக்கும் அச்சத்தையும், தனிமையையும் வெற்றிகொள்வதற்கு உதவுவதே இதன் நோக்கம் என்று குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்ட மக்களுடன், இந்த வலைத்தளம் வழியே உரையாடி உதவும் சுயவிருப்பப்பணியாளர்கள் குழுவுக்கு, இந்திய மொழிகள் தவிர, ஆங்கிலம், இத்தாலியம், பிரெஞ்சு, இஸ்பானியம், சீனம் ஆகிய மொழிகளும் தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

02 March 2020, 15:24