தேடுதல்

Vatican News
ஆயர் பால் ஹின்டர் ஆயர் பால் ஹின்டர்  

கோவிட்-19 குறித்து திகிலடைய வேண்டாம்

ஆண்டவரே அனைத்து தீமைகளிலிருந்தும் காப்பாற்றும் என்று திருப்பலியில் செபிக்கிறோம், ஆண்டவரின் இரக்கத்தால் நாம் எல்லாச் சோதனைகளிலிருந்து விடுதலை பெறுவோம் – ஆயர் ஹின்டர்

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல் சூழல், நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும், பிறரன்புக்குச் சான்றுகளாய் வாழ, கத்தோலிக்கருக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று, தெற்கு அரேபிய அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் பால் ஹின்டர் அவர்கள் கூறினார்.

இந்நெருக்கடி நிறைந்த சூழலில், இந்த தவக்காலத்தில், நற்செய்தி விழுமியங்களுக்கு  எடுத்துக்காட்டாய் வாழ்வதற்கும் கத்தோலிக்கருக்கு ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும், ஆயர் பால் ஹின்டர் அவர்கள் கூறினார்.

அரபு ஐக்கிய அமீரகம், கொரோனா தொற்றுக்கிருமி பரவலைத் தடுப்பதற்கு மிகவும் கவனமுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும், அரசு அதிகாரிகளின் ஆணைப்படி கத்தோலிக்க ஆலயங்களில் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள், வருகிற ஏப்ரல் 2ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும், ஆயர் பால் ஹின்டர் அவர்கள் கூறினார். (Fides)

10 March 2020, 16:15