தேடுதல்

Vatican News
நைஜீரியாவில், 2018ம் ஆண்டு, தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அருள்பணியாளர்கள் - கோப்புப் படம் நைஜீரியாவில், 2018ம் ஆண்டு, தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அருள்பணியாளர்கள் - கோப்புப் படம்  (AFP or licensors)

நைஜீரியாவில் கடத்திச் செல்லப்பட்ட அருள்பணியாளர்

நைஜீரியாவில், அண்மைக்காலங்களில், அருள்பணியாளர்கள் உட்பட, பலர் கடத்திச் செல்லப்பட்டு, பிணையத்தொகை பெற்றபின்னர் விடுவிக்கப்படுவது, தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நைஜீரியாவில், அருள்பணித்துவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர் ஒருவர், அண்மையில் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ள இரு வாரங்களுக்குப்பின், மீண்டும் ஓர் அருள்பணியாளர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளியன்று, தென் கிழக்கு நைஜீரியாவின் Uromi மறைமாவட்டத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட அருள்பணியாளர் Nicholas Oboh குறித்து எவ்வித செய்தியும் இதுவரை கிட்டவில்லையெனினும், அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை நம்புவதாக, அம்மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.

அருள்பணியாளர் Oboh அவர்கள் கடத்திச் செல்லப்பட்ட அதே நாளில், Umelu என்ற இடத்திலிருந்து பல குழந்தைகளும் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவில், அண்மைக்காலங்களில், அருள்பணியாளர்கள் உட்பட, பலர் கடத்திச் செல்லப்பட்டு, பிணையத்தொகை பெற்றபின்னர் விடுவிக்கப்படுவது, தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.

17 February 2020, 15:21