தேடுதல்

நைஜீரியாவில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள அருள்பணி நிக்கோலஸ் ஓபோ   நைஜீரியாவில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள அருள்பணி நிக்கோலஸ் ஓபோ  

நைஜீரியாவில் கடத்தப்பட்ட அருள்பணியாளர் விடுதலை

கடந்த வாரம், நைஜீரியாவில் கடத்தப்பட்ட அருள்பணியாளர் நிக்கோலஸ் ஓபோ அவர்கள், பிப்ரவரி 18, இச்செவ்வாயன்று விடுவிக்கப்பட்டுள்ளார் - உரோமி மறைமாவட்டம் அறிவிப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த வாரம், நைஜீரியாவில் கடத்தப்பட்ட அருள்பணியாளர் நிக்கோலஸ் ஓபோ (Nicholas Oboh) அவர்கள், பிப்ரவரி 18, இச்செவ்வாயன்று விடுவிக்கப்பட்டுள்ளார் என்று, உரோமி (Uromi) மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

கடத்தப்பட்ட அருள்பணியாளர் ஓபோ அவர்கள் விடுதலை அடைந்துள்ளார் என்றும் அவருக்காக இறைவேண்டல் செய்த அனைவருக்கும் நன்றி என்றும், அறிவித்துள்ள இம்மறைமாவட்டம், மேலும் விவரங்களை வெளியிடும் என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

அருள்பணி ஓபோ அவர்கள் கடத்தப்பட்ட அதே நாளில், கடத்திச் செல்லப்பட்ட பல குழந்தைகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும், இக்குழந்தைகளைப்பற்றி எவ்விதத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை எனும் நைஜீரிய ஊடகங்கள் கூறுகின்றன.

நைஜீரியாவில், அருள்பணித்துவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த 18 வயதான Michael Nnadi என்ற இளைஞர், இவ்வாண்டு சனவரி மாதம் கொல்லப்பட்டார், அத்துடன், Lawan Andima என்ற கிறிஸ்தவ அரசு அதிகாரி, தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டார்.   

கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்துவரும் வன்முறைகளைத் தடுக்க, அரசுத்தலைவரும், அரசு அதிகாரிகளும் தகுந்த முயற்சிகளை எடுக்கவில்லை என்று, நைஜீரிய ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Augustine Obiora Akubeze அவர்கள் கூறியுள்ளார். (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 February 2020, 15:15