தேடுதல்

Vatican News
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில் புத்தாண்டின் துவக்கத்தில் வாண வேடிக்கைகள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில் புத்தாண்டின் துவக்கத்தில் வாண வேடிக்கைகள்  (AFP or licensors)

மனம் நிறைந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

"ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!" - எண்ணிக்கை நூல் 6: 24-26

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

அன்புள்ளங்களே, புதியதோர் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் வத்திக்கான் வானொலி குடும்பத்தினர் அனைவருக்கும் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள். ஒவ்வோர் ஆண்டும், புத்தாண்டின் முதல் நாள் நிறைவேற்றப்படும் திருப்பலிகளில், எண்ணிக்கை நூலின் ஒரு பகுதி வாசிக்கப்படுகிறது. இஸ்ரயேல் மக்களுக்கு எவ்விதம் ஆசிகூறவேண்டும் என்று, இறைவன் வழங்கிய அறிவுரை அது. நமது ஆலயங்களில் ஒலிக்கும் இந்த ஆசிகள், நம் வானொலி வழியே, ஒவ்வொரு இல்லத்திலும் இன்று ஒலிக்கட்டும்:

எண்ணிக்கை நூல் 6: 23-26

நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!"

01 January 2020, 15:32