தேடுதல்

நைஜீரியாவில் அமைதி வேண்டி ஆயுதங்களை ஒப்படைத்துள்ள ஒரு குழு நைஜீரியாவில் அமைதி வேண்டி ஆயுதங்களை ஒப்படைத்துள்ள ஒரு குழு 

நைஜீரியாவில் ஒரு குருத்துவ மாணவர் விடுதலை

கடத்தப்பட்டுள்ள குருத்துவ மாணவர்களை நினைக்கையில் என்னால் உறங்க முடியவில்லை, மக்களும், இரு கண்களையும் மூடியபடி தூங்க முடியவில்லை - பேராயர் Ndagoso

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

நைஜீரியாவில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, இம்மாதத்தில் கடத்தப்பட்டிருந்த நான்கு இளம் குருத்துவ மாணவர்களில் ஒருவர் விடுதலைசெய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.

சனவரி 8ம் தேதி, நைஜீரியாவின் கடூனா (Kaduna) மாநிலத்திலுள்ள நல்லாயன் உயர் குருத்துவக் கல்லூரிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த சிலர், அக்கல்லூரிக்குள் துப்பாக்கிச் சூட்டை நடத்தி, 4 பேரை கடத்திச் சென்றனர்.

அந்த நால்வரில் ஒருவர், சனவரி 18, கடந்த சனிக்கிழமையன்று, கடூனா-அபுஜா நெடுஞ்சாலையில் விடப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார் என்று செய்திகள் கூறுகின்றன.

இக்கடத்தல்கள் குறித்து பீதேஸ் செய்தியிடம் பேசிய, கடூனா பேராயர் Matthew Man-oso Ndagoso அவர்கள், நாங்கள் முற்றுகையிடப்பட்ட நிலையில் உள்ளோம், இத்தகைய பாதுகாப்பற்ற சூழலை எந்த ஒரு நாடும் சகித்துக்கொள்ளாது என்று கூறியுள்ளார்.

கடூனா உயர்மறைமாவட்டத்தில் இவ்வாறு கடத்தல் நடந்திருப்பது இது மூன்றாவது முறை என்று கூறியுள்ள பேராயர் Ndagoso அவர்கள், கடத்தப்பட்டுள்ள இந்த குருத்துவ மாணவர்களை நினைக்கையில் என்னால் உறங்க முடியவில்லை என்றும், மக்களும், இரு கண்களையும் மூடியபடி தூங்க முடியவில்லை என்றும் கூறினார்.

19 வயது நிரம்பிய Pius Kanwai, 23 வயது நிரம்பிய Peter Umenukor, Stephen Amos, 18 வயது நிரம்பிய Michael Nnadi ஆகிய நால்வரும், இம்மாதம் 8ம் தேதி கடத்தப்பட்டனர். (CNA/Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 January 2020, 15:05