தேடுதல்

இயேசுவின் திரு உருவம் இயேசுவின் திரு உருவம் 

மதம் சார்ந்த மோதல்கள் நிறுத்தப்பட அழைப்பு

114 அடி உயரம் கொண்ட மீட்பராம் கிறிஸ்துவின் திருவுருவம், Kapala Betta குன்றுகளில் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைக்கப்பட்டுவரும் கிறிஸ்துவின் திருவுருவத்திற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளவேளை, மதம் சார்ந்த மோதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று, பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள், அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

Kapala Betta குன்றில் நிறுவப்படவிருக்கும் இயேசுவின் திருவுருவம் குறித்த பெரும்பான்மை இந்து மதத்தவரின் உணர்வுகளைப் புரிந்துகொள்கின்றோம், அதேநேரம், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், எமக்கும் வாழ்வதற்கு உரிமை உள்ளது என்று, பேராயர் மச்சாடோ அவர்கள் கூறியுள்ளார்.

கிறிஸ்தவர்கள் இந்தக் குன்றுப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர், இந்தக் குன்று கிறிஸ்தவர்களின் சிலுவைப்பாதை பக்தி முயற்சிக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது, உண்மையில், 'Betta'  என்றால், கடுமையான சோதனை என்று பொருள், இதனை நாங்கள், ஒரு மதநம்பிக்கை விவகாரமாக அமைக்க மாட்டோம் என்றும், பெங்களூரு பேராயர், ஆசியச் செய்தியிடம் கூறியுள்ளார்.

இன்று எமது திருத்தலத்தில் குழந்தை இயேசுவின் விழாவைச் சிறப்பிக்கிறோம், நாங்கள், அமைதிக்காகத் தொடர்ந்து செபிக்கிறோம் மற்றும், அதற்காக உழைக்கிறோம் என்றும், பேராயர் மச்சாடோ அவர்கள் கூறியுள்ளார்.

சனவரி 13, இத்திங்களன்று, பிஜேபி கட்சியினர், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், Hindu Jagran Vedike அமைப்பினர் ஆகியோர், "Betta" குன்றில் கிறிஸ்துவின் திருவுருவம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய அளவில் போராட்டம் நடத்தினர். (AsiaNews / Agencies)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2020, 15:38