தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன் திருப்பலி நிறைவேற்றும் கர்தினால் தாக்லே திருத்தந்தையுடன் திருப்பலி நிறைவேற்றும் கர்தினால் தாக்லே 

கர்தினால் தாக்லே, உலகளாவிய திருஅவைக்கு ஒரு கொடை

கர்தினால் தாக்லே அவர்கள், பிலிப்பீன்சின் தேசிய கொடியை ஏந்திச் செல்பவர் மற்றும், பிலிப்பீன்ஸ் மக்களின் விசுவாசத்தை உலகிற்குக் கொண்டு செல்பவர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் உலகளாவிய திருஅவைக்கும், உரோம் நகருக்கும் ஒரு கொடை என்று, பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் ரோமுலோ வாலெஸ் அவர்கள் கூறினார்.

நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கர்தினால் தாக்லே அவர்களுக்கு, சனவரி 26, இஞ்ஞாயிறன்று, மணிலாவில், பிரியாவிடை அளித்த நிகழ்வில் உரையாற்றிய பேராயர் வாலெஸ் அவர்கள், கர்தினால் தாக்லே அவர்கள், பிலிப்பீன்ஸ் தலத்திருஅவையிலிருந்து செல்வது வருத்தமாக இருந்தாலும், அதை நினைத்து மகிழ்வடைவதற்கு பல காரணங்கள் உள்ளன என்று கூறினார்.

கர்தினால் தாக்லே அவர்கள், பிலிப்பீன்சின் தேசிய கொடியை ஏந்திச் செல்பவர் மற்றும், பிலிப்பீன்ஸ் மக்களின் விசுவாசத்தை உலகிற்குக் கொண்டு செல்பவர் என்றும், பேராயர் வாலெஸ் அவர்கள் கூறினார். 

கர்தினால் தாக்லே அவர்கள், ஆற்றவிருக்கும் கடினமான பணியில் ஆண்டவர் அவரை தொடர்ந்து ஆசீர்வதித்து, எப்பொழுதும் மகிழ்வில் வைத்திருக்க வேண்டுமென்று, பிலிப்பீன்ஸ் மக்கள் அனைவரும் செபிப்பதாகவும், தவாவோ பேராயர் வாலெஸ் அவர்கள் வாழ்த்தினார்.

மணிலாவில் தங்களின் 120வது ஆண்டு நிறையமர்வு கூட்டத்தை கடந்த சனிக்கிழமையன்று துவங்கிய, பிலிப்பீன்சின் 90க்கும் அதிகமான ஆயர்கள் இஞ்ஞாயிறன்று, கர்தினால் தாக்லே அவர்களுக்குப் பிரியாவிடை அளித்தனர். (CBCP)

28 January 2020, 15:23