தேடுதல்

Vatican News
ஜெர்மனியில் விண்மீன் இசைக்குழுவினர் ஜெர்மனியில் விண்மீன் இசைக்குழுவினர் 

ஆசீர்வாதங்களைக் கொணருங்கள், ஆசீர்வாதங்களாக இருங்கள்

ஜெர்மனியின் ஏறத்தாழ மூன்று இலட்சம் சிறார், கிறிஸ்மஸ் ஆசீர்வாதங்கள் கொண்ட அட்டைகளைத் தாங்கிக்கொண்டு வீடுகளைச் சந்திப்பர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

"லெபனானிலும், உலகெங்கிலும் ஆசீர்வாதங்களைக் கொண்டுவாருங்கள், ஆசீர்வாதங்களாக இருங்கள், அமைதி!" என்ற விருதுவாக்குடன், ஜெர்மனியில் விண்மீன் இசைக்குழுவினர் (Sternsinger), 2020ம் ஆண்டு நடவடிக்கையைத் துவங்கியுள்ளனர்.

இக்குழுவினர், 2020ம் ஆண்டின் அடையாள நாடாக, லெபனானை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்நடவடிக்கை, டிசம்பர் 28, வருகிற சனிக்கிழமையன்று, ஜெர்மனி முழுவதும் Osnabrück நகரில், தேசிய அளவில், துவக்கி வைக்கப்படும் என்று பீதேஸ் செய்தி கூறுகின்றது.

இக்கிறிஸ்மஸ் காலத்திலும், புதிய ஆண்டின் சில நாள்களிலும் விண்மீன் இசைக்குழுவினர், விண்மீன் விளம்பரப் பதாகைகளுடன் கீழ்த்திசை ஞானிகள் உடையணிந்து, கிறிஸ்மஸ் பாடல்களைப் பாடிக்கொண்டு ஜெர்மனியில் வீடுகளைச் சந்திப்பர். ஜெர்மனியின் 27 மறைமாவட்டங்களின் ஏறத்தாழ பத்தாயிரம் கத்தோலிக்கப் பங்குத்தளங்களிலிருந்து ஏறத்தாழ மூன்று இலட்சம் சிறார், கிறிஸ்மஸ் ஆசீர்வாதங்கள் கொண்ட அட்டைகளைத் தாங்கிக்கொண்டு வீடுகளைச் சந்திப்பர்

சனவரி 6ம் தேதி திங்களன்று ஜெர்மன் அரசுத்தலைவர் Frank-Walter Steinmeier அவர்களும், 7ம் தேதி ஜெர்மன் சான்சிலர் Angela Merkel அவர்களும் இந்த இசைக்குழுவினரைச் சந்திப்பர். இப்பழக்கம் 1984ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. (Fides)

21 December 2019, 15:12