தேடுதல்

Vatican News
லெபனான் உணவு வங்கி லெபனான் உணவு வங்கி   (ANSA)

பிரித்தானியாவில் உணவு வங்கிகளற்ற வருங்காலம் அவசியம்

பிரித்தானியாவில், மக்களின் ஊதியம், அத்தியாவசிய செலவுகளுக்குப் போதுமானதாக இல்லை. அதனால் மக்கள் உணவு வங்கிகளைத் தேடி வருகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிரித்தானியாவில் வருங்காலத்தில், உணவுக்காக ஏங்குபவர்களே இல்லாத ஒரு நிலையை கொணர்வதற்கு, இப்போதே நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, புதிய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது, பிறரன்பு அமைப்பு ஒன்று.

பிரித்தானியாவிலுள்ள ஏறத்தாழ 2,200 உணவு வங்கிகளில் மூன்றில் இரண்டு வங்கிகளை நடத்தும் Trussell என்ற அறக்கட்டளையின் தலைவர் Emma Revie அவர்கள், ICN கத்தோலிக்கச் செய்தியிடம் உணவு வங்கியின் அவசியம் பற்றி பேசியவேளை, இவ்வாறு புதிய அரசை வலியுறுத்தினார்.

மக்கள் தங்களின் அத்தியாவசிய செலவுகளுக்கு நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்வதால், உடனடி உணவுக்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று Revie அவர்கள் கூறினார்.

மகிழ்வு மற்றும், கொண்டாட்டத்தின் காலமாக இருக்க வேண்டிய கிறிஸ்மஸ் காலத்தில், பசித்திருப்போரின் தேவைகளை நிறைவேற்றும்பொருட்டு, உணவு வங்கிக்கு மக்கள் தாராளமாக நன்கொடைகளை வழங்குமாறும் Revie அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரித்தானியாவில், இந்தக் குளிர்காலத்தில், அறுபதாயிரம் பேருக்கு உதவி தேவைப்படும் என்று கூறியுள்ள வின்சென்ட் தெ பவுல் பிறரன்பு அமைப்பு, அந்த அமைப்பின் ஏறத்தாழ பத்தாயிரம் தன்னார்வலர்கள் சூடான உணவு தயாரித்து, தெருக்களில் வாழ்வோர்க்கு வழங்கி வருகின்றனர் மற்றும், வீடுகளையும் சந்தித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது. (ICN)

20 December 2019, 16:26