தேடுதல்

Vatican News
கொலம்பியாவில் அமைதியை எதிர்நோக்கியிருக்கும் மக்கள் கொலம்பியாவில் அமைதியை எதிர்நோக்கியிருக்கும் மக்கள்  (AFP or licensors)

கொலம்பியாவின் 'அமைதிக்காக வாரம்’

மரங்கள் நடுதல், தோட்டங்களை உருவாக்குதல், தேசிய மனித உரிமைகள் நாளை சிறப்பித்தல், விருது வழங்குதல் என தொடர்கிறது, கொலம்பியாவில் 32வது அமைதி வாரம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், அமைதி மற்றும் ஒப்புரவைக் கட்டியெழுப்புவதற்காக பலர் உழைத்து வருவதை ஊக்குவிக்கும் விதமாக, அந்நாட்டில், 'அமைதிக்காக வாரம்’ என்ற நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.

32வது, 'அமைதிக்காக வாரம்’ என்ற நடவடிக்கையை செப்டம்பர் 3, இச்செவ்வாயன்று துவக்கி வைத்து, கொலம்பியாவின் பல்வேறு நகரங்களில், அமைதியை ஊக்குவிக்கும் நிகழ்வுகளை நடத்திவருகின்றது, அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பு.

மரங்கள் நடுதல், அமைதி பகுதிகளில் தோட்டங்களை உருவாக்குதல், தேசிய மனித உரிமைகள் நாளை சிறப்பித்தல், விருது வழங்குதல் என, செப்டம்பர் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை, ‘அமைதிக்காக’ எனப்படும் 32வது வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

03 September 2019, 15:41