தேடுதல்

இஸ்பெயின் நாட்டில் புலம்பெயர்ந்தோர் அடைக்கலம் வழங்கப்பட்டபோது இஸ்பெயின் நாட்டில் புலம்பெயர்ந்தோர் அடைக்கலம் வழங்கப்பட்டபோது 

புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கென இஸ்பெயின் ஆயர்கள்

கத்தோலிக்கத் திருஅவையில், உலக புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் நாள், 1914ம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் மீது அக்கறை காட்டுவது உட்பட,  அயலவரிடம் அன்பு காட்ட வேண்டியது கிறிஸ்தவர்களுக்கு இன்றியமையாதது என்று, இஸ்பெயின் கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

செப்டம்பர் 29ம் தேதி ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் உலக புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் நாளுக்கு முன்தயாரிப்பாக, இஸ்பெயின் ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழு தலைவர், ஆயர் Luis Quinteiro அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு கூறியுள்ளார்.

நாம் நம் சகோதரர் சகோதரிகளை அன்புகூராவிடில், கடவுளை அன்புகூர மாட்டோம் என்பதை வலியுறுத்தியுள்ள ஆயர் Quinteiro அவர்கள், வெளிநாட்டவர் ஆபத்தானவர்கள் அல்ல, அவர்கள் நாம் வளமடைய உதவுகின்றவர்கள் என்பதை, இந்த உலக நாள் மக்களுக்கு நினைவுபடுத்தும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும், புலம்பெயர்ந்தோரின் சமுதாயநிலை எப்படியிருந்தாலும், அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என, இஸ்பானிய ஆயர்கள் கூறியுள்ளனர்.

கத்தோலிக்கத் திருஅவையில், உலக புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் நாள், 1914ம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக சனவரி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் உலக புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் நாள், இவ்வாண்டு செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுகிறது.(CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2019, 15:41