தேடுதல்

Vatican News
மலேசியாவில் சூழலியல் மலேசியாவில் சூழலியல்  (AFP or licensors)

மலேசிய ஆயர்கள் - சமயப் பதட்டநிலை குறித்து கவலை

புதிய மலேசியா என்ற கனவு நிறைவேற வேண்டுமெனில், பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல் செயல்களுக்கு எதிராய் அரசு பொதுப்படையாகப் பேச வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மலேசியாவிற்கு, கிறிஸ்தவம் அச்சுறுத்தலாக இருக்கின்றது என, அந்நாட்டு பழமைவாத முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்ந்து கூறிவருவது கவலையாக உள்ளது என்று, அந்நாட்டு திருஅவைத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

மலாய் மொழி பேசும் மக்களை அதிகமாகக்கொண்ட இரு அரசியல் எதிர்க்கட்சிகள், இஸ்லாமிய ஒன்றிப்பு என்ற கொள்கையில், கடந்த வாரத்தில் ஒன்றிணைந்திருப்பது, பல கலாச்சாரங்களைக் கொண்ட மலேசியாவில், இன மற்றும், மதம் சார்ந்த பதட்டநிலைகளை உருவாக்கும் என்ற அச்சம் பரவலாக நிலவுகிறது.

அந்நாட்டில் அரசியல் பகைவர்கள் எடுத்துள்ள இந்த வாக்குறுதிக்கு எதிராக, இப்புதனன்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள, மலேசிய கிறிஸ்தவ சபைகள் அவை, மலேசிய அரசியலில் மதம் நுழைந்திருப்பது கவலை தருகின்றது என்று கூறியுள்ளது.

இது குறித்து பேசியுள்ள கோலாலம்பூர் பேராயர் ஜூலியன் லெயோ பெங் கிம் அவர்கள், புதிய மலேசியா என்ற கனவு நிறைவேற வேண்டுமெனில், பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல் செயல்களுக்கு எதிராய் அரசு பொதுப்படையாகப் பேச வேண்டும் என்று கூறினார். (UCAN)

19 September 2019, 15:23