தேடுதல்

பாகிஸ்தானின் Mirpur மாவட்ட இடிபாடுகள் பாகிஸ்தானின் Mirpur மாவட்ட இடிபாடுகள் 

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் பாகிஸ்தான் தலத்திருஅவை

செப்டம்பர் 24ம் தேதி, பாகிஸ்தானின் Mirpur மாவட்டத்தில் 5.8 ரிக்டர் அளவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில், ஐம்பது பேர் இறந்துள்ளனர் மற்றும்,. 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்திய - பாகிஸ்தான் எல்லையிலுள்ள Mirpur மாவட்டத்தில், இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள், மற்றும், சொத்துக்களை இழந்தவர்களுக்கு, உடனடி நிவாரண உதவிகளை ஆற்றி வருகிறது, தலத்திருஅவை.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்-இராவல்பிண்டி உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த இம்மாவட்டத்தில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார், பாகிஸ்தான் ஆயர் பேரவைத் தலைவரும், அவ்வுயர்மறைமாவட்ட பேராயருமான, பேராயர் ஜோசப் அர்ஷத்.

செப்டம்பர் 24, இச்செவ்வாயன்று 5.8 ரிக்டர் அளவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில், ஐம்பது பேர் இறந்துள்ளனர் மற்றும்,. 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றுரைத்த பேராயர் அர்ஷத் அவர்கள், பாகிஸ்தான் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடர்துடைப்பு உதவிகளை ஆற்றி வருகின்றது என்று கூறினார்.

பாகிஸ்தானுக்காக ஏனையோரும் செபிக்குமாறும், இயன்ற அளவு உதவுகள் புரியுமாறும், பேராயர் அர்ஷத் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.(AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2019, 14:46