தேடுதல்

Vatican News
எல் பாசோவில் தாக்குதல்களில் இறந்தவர்களுக்கு அஞ்சலி எல் பாசோவில் தாக்குதல்களில் இறந்தவர்களுக்கு அஞ்சலி  

வெறுப்புணர்வைத் தூண்டும் சொல்லாடல்கள் வன்முறைக்கு..

இனவெறியைத் தூண்டும் அறிக்கைகளை வெளியிட, எவருக்கும் நன்னெறி சார்ந்த உரிமை கிடையாது. குடிபெயர்ந்தோரை அச்சுறுத்துவது, அச்சத்தையே கொணரும் - அமெரிக்க ஆயர்கள்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில், அந்நியர்மீது வெறுப்பு மற்றும், மனிதத்தைத் தாழ்த்திப் பேசும் சொல்லாடல்கள் நிலவுவது குறித்த தங்களின் வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளனர், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.

டெக்சஸ் மாநிலத்தின் எல் பாசோ நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதல்களால் 22 பேர் உயிரிழந்த நிகழ்வு, அந்நியர் மீதுள்ள வெறுப்புணர்வே காரணம் என வெளிப்படுத்துகின்றது என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் பல்வேறு பணிக்குழுத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

குடிபெயர்வோர், புலம்பெயர்வோர், இஸ்லாமியர், யூதர்கள் ஆகியோர்க்கெதிரான எதிர்ப்பு உணர்வுகள், அண்மை ஆண்டுகளாக, அமெரிக்க சமுதாயத்தில் பொதுப்படையாகவே அறிவிக்கப்படுகின்றன என்றுரைத்துள்ள ஆயர்கள், இத்தகைய அறிவிப்புகள், சமுதாயங்களில் வெறுப்புணர்வைத் தூண்டி விடுகின்றன என்று கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் குடிபெயர்வோர் பணிக்குழுத் தலைவர், ஆயர் ஜோ வால்கெஸ் அவர்களும், குடும்ப நலம் மற்றும், முன்னேற்ற  பணிக்குழுத் தலைவர், ஆயர் பிராங் தெவான் அவர்களும், இனவெறிக்கெதிரான பணிக்குழுத் தலைவர், ஆயர் ஷெல்டன் ஃபாப்ரே அவர்களும் இணைந்து, இவ்வாரத்தில் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

10 August 2019, 16:08