தேடுதல்

Vatican News
பிலிப்பீன்ஸில் ஏழைகளுக்கு ஆதரவாகப் பணியாற்றிவரும் கிராமப்புற மறைப்பணியாளர்கள் அமைப்பு பிலிப்பீன்ஸில் ஏழைகளுக்கு ஆதரவாகப் பணியாற்றிவரும் கிராமப்புற மறைப்பணியாளர்கள் அமைப்பு  

பிலிப்பீன்சில் கிராமப்புற மறைப்பணியாளர்கள் அமைப்பு

கிராமப்புற மறைப்பணியாளர்கள் அமைப்பு, ஏழை மக்களோடு சேர்ந்து வேலை செய்து, அவர்களின் மனித மாண்பும், உரிமைகளும் மதிக்கப்படவும், அமைதி மற்றும், சமுதாய நீதி காக்கப்படவும், கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில், ஒதுக்குப்புற பகுதிகளில் ஏழைகளுக்கு ஆதரவாகப் பணியாற்றிவரும் கிராமப்புற மறைப்பணியாளர்கள் அமைப்பு (RMP),  தனது ஐம்பதாவது ஆண்டை சிறப்பித்துள்ளது.

அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும், பொதுநிலையினரைக் கொண்ட இந்த அமைப்பினர், குறுநில விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர், மீனவர்கள், மற்றும், பழங்குடியினர் மத்தியில் வாழ்ந்து, அவர்களோடு இணைந்து பணியாற்றி, அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர்.

மறைமாவட்டங்கள், துறவற சபைகள் உட்பட, தேசிய அளவில் பல கத்தோலிக்கரைக் கொண்ட பிலிப்பீன்ஸ் கிராமப்புற மறைப்பணியாளர்கள் அமைப்பு, 1969ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, அந்நாட்டு இருபால் துறவியர் அமைப்பின் ஒரு பிரிவாக ஆரம்பிக்கப்பட்டது.

ஏழை சமுதாயங்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதுடன், அமைதி மற்றும், சமுதாய நீதிக்காக, கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த அமைப்பினர் உழைத்து வருகின்றனர் என்று, இந்த அமைப்பின் புதிய தேசிய ஒருங்கிணைப்பாளர் அருள்சகோதரி Elsa Compuesto அவர்கள், பீதேஸ் செய்தியிடம் தெரிவித்தார். (Fides)

22 August 2019, 15:19