தேடுதல்

Vatican News
எரிட்ரியா பெண்கள் எரிட்ரியா பெண்கள்  (embargoed until 12th October)

எரிட்ரியாவில் விசுவாசத்திற்காக 150 கிறிஸ்தவர்கள் கைது

கடந்த ஜூன் 23ம் தேதி, 70 கிறிஸ்தவர்களும், ஆகஸ்ட் 18ம் தேதி Godayef நகரில், மேலும் 80 கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ விசுவாசத்திற்காக, கைது செய்யப்பட்டுள்ளனர்

மேரி தெரேசா- வத்திக்கான் செய்திகள்

எரிட்ரியாவில், மூன்றே மாதங்களில், 150 கிறிஸ்தவர்கள், தங்களின் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக, கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் ஏனையோர், நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு, கிறிஸ்துவை மறுதலிக்குமாறு வற்புறுத்தப்பட்டுள்ளனர் என்று, செய்திகள் கூறுகின்றனர். 

எரிட்ரியாவின் Keren நகரில், கடந்த ஜூன் 23ம் தேதி, 70 கிறிஸ்தவர்களும், அதற்கு இரு மாதங்கள் சென்று, ஆகஸ்ட் 18ம் தேதி Godayef நகரில், மேலும் 80 கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ விசுவாசத்திற்காக, கைது செய்யப்பட்டுள்ளனர்

Tempi எனப்படும், இத்தாலிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, கடந்த ஜூனில் கைதுசெய்யப்பட்ட 70 கிறிஸ்தவர்கள், Ashuferaவில் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.

பூமிக்கடியிலுள்ள குகைப்பாதைகளில், கைதிகள் வைக்கப்பட்டு, அவற்றைத் தோண்டுவதற்கு அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

கைதாகியுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும், கிறிஸ்துவின் விசுவாச மறைப்பணி சபையைச் சார்ந்தவர்கள். இச்சபையினர், 2002ம் ஆண்டில் அங்கீகாரத்திற்காக எரிட்ரியா அரசிடம் விண்ணப்பித்தனர். ஆயினும், இதுவரை அச்சபைக்கு அனுமதி தரப்டவில்லை என்று கூறப்பட்டுள்ளது. (Fides)

30 August 2019, 15:24