தேடுதல்

Vatican News
கிறிஸ்தவ ஒன்றிப்பு முதபெரும் தந்தை பர்த்தலோமேயு, மற்றும், திருத்தந்தை பிரான்சிஸ் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதபெரும் தந்தை பர்த்தலோமேயு, மற்றும், திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

மரங்களின் முக்கியத்துவத்தை உணர அழைப்பு

படைப்பை நம் தேவைக்கு ஏற்றாற்போல் சுயநலமாகப் பயன்படுத்தும் வழிமுறைகளே உலக வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புவி வெப்பமடைந்து வருவதைத் தொடர்ந்து, அமேசான் காட்டுப் பகுதிகளிலும், ஆப்பிரிக்க பாலைவனப் பகுதிகளிலும், நெருப்பும், வெப்பக் காற்றும் அதிகரித்துள்ளது குறித்து, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் Constantinople கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு.

படைப்பை நம் தேவைக்கு ஏற்றாற்போல் சுயநலமாகப் பயன்படுத்தும் வழிமுறைகளே இதற்கு காரணம் என தன் அறிக்கையில் கூறியுள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, மரங்களின் முக்கியத்துவத்தை உணராமல், அவைகளை வெட்டிச் சாய்ப்பது, உலக வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாகிறது என தெரிவித்துள்ளார்.

இவ்வுலகம் கொண்டிருக்கும் குறைந்த அளவுடைய வளங்கள், மற்றும், படைப்பின் புனிதத்துவம் குறித்து கருத்தில்கொண்டுச் செயல்படவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார், Constantinople கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு.

26 August 2019, 15:36