தேடுதல்

Vatican News
மத்தியதரைக்கடலில் புலம்பெயர்ந்தோரைக் காப்பாற்றும் பணிகள் மத்தியதரைக்கடலில் புலம்பெயர்ந்தோரைக் காப்பாற்றும் பணிகள்  

புலம்பெயர்ந்தோர் நம் நாட்டிற்கு சக்தியைக் கொணர்கின்றனர்

ஆஸ்திரேலியத் திருஅவை, ஆகஸ்ட் 19, இத்திங்கள் முதல், ஆகஸ்ட் 25, வருகிற ஞாயிறு வரை, கடைப்பிடித்துவரும், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் வாரத்தை கடைப்பிடித்து வருகிறது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

புலம்பெயர்வோரும், குடிபெயர்வோம், ஒரு புதிய நாட்டிற்கு, சக்தியையும், உயிரூட்டத்தையும் எப்போதும் கொண்டு வருகின்றனர் என்று, ஆஸ்திரேலிய ஆயர் ஒருவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவில், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் வாரத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய, அந்நாட்டு ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் பணிக்குழுவின் பிரதிநிதி, பிரான்சிஸ்கன் சபை ஆயர் வின்சென்ட் லாங் (Vincent Long)அவர்கள், இன்று ஆஸ்திரேலியா, வளமையான இளம் நாடாக வளர்ந்து வருவதற்கு காரணம் யார் என்பது பற்றி எண்ணிப் பார்க்குமாறு வலியுறுத்தினார்.

நம் புதிய ஆஸ்திரேலியர்கள், சுதந்திரம், அடிப்படை மனித விழுமியங்கள் போன்றவற்றின் மீது கொண்டிருக்கும் அன்பே இதற்குக் காரணம் என்று கூறிய, ஆயர் லாங் அவர்கள், புலம்பெயர்ந்தோர் வெறும் எண்கள் அல்ல என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லியிருப்பதை நினைவுபடுத்தினார்.

புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரின் உயிர்த்துடிப்புள்ள விசுவாசத்தினால், ஆஸ்திரேலிய திருஅவை உயிரூட்டம் பெற்றுள்ளது என்றும், ஆயர் குறிப்பிட்டார். (Fides)

ஆஸ்திரேலியாவில், 1945ம் ஆண்டிலிருந்து, 1990ம் ஆண்டு ஆரம்பம் வரை, 50 இலட்சத்திற்கு அதிகமான புலம்பெயர்ந்தோர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

23 August 2019, 13:54