தேடுதல்

Vatican News
ஈக்குவதோர் பூர்வீக மக்கள் ஈக்குவதோர் பூர்வீக மக்கள்  (AFP or licensors)

அருள்சகோதரர் ஒருவருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருது

ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் 250 மொழிகளுள், தற்போது 120 மட்டுமே பேச்சு மொழியாக உள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஆஸ்திரேலிய பூர்வீக இன மக்களின் மொழிக்கு ஆற்றிய சிறப்புச் சேவைக்கென ஆஸ்திரேலிய அரசின் உயரிய விருதொன்றை பெற்றுள்ளார், அந்நாட்டு துறவு சபை அருள்சகோதரர் ஒருவர்.

ஆஸ்திரேலியாவின் பூர்வீக இனங்களுள் ஒன்றான Gumbaynggirr இனத்தலைவர்களின் விண்ணப்பத்தின் பேரில், அம்மொழியில் அகராதி ஒன்றை எழுதி, அம்மொழியை மற்றவர்களுக்கும் கற்பித்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டி உழைத்த கிறிஸ்தவ அருள்சகோதரர்கள் துறவு சபையின், அருள்சகோதரர் Steve Morelli அவர்களுக்கு, "Patji-Dawes" விருதை வழங்கி கௌரவித்துள்ளது, ஆஸ்திரேலிய அரசு. ஆங்கிலம் தவிர ஏனைய மொழிகளைக் கற்பிப்பதில் சிறப்புப் பங்காற்றியவர்களுக்கு வழங்கப்படும் மிக முக்கிய விருதாகவும் இது.

'பூர்வீக குடிமக்கள் மொழிகளின் அனைத்துலக ஆண்டு' என்று, 2019ம் ஆண்டை ஐக்கிய நாடுகள் நிறுவனம் சிறப்பித்துவரும்வேளை, இவ்விருதைப் பெறுவது ஒரு முக்கிய நிகழ்வாக நோக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களின் 250 மொழிகளுள், தற்போது 120 மட்டுமே பேச்சு மொழியாக இருப்பதாகவும், அதிலும் 90 விழுக்காட்டு மொழிகள் அழியும் நிலையில் இருப்பதாகவும், செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. (Fides)

29 July 2019, 16:33