தேடுதல்

Vatican News
வத்திக்கான் செய்தித்துறையின் சலேசிய அருள்பணியாளர் ஆபிரகாம் கவலக்காட் அவர்கள் எழுதிய நூலுக்கு விருது வத்திக்கான் செய்தித்துறையின் சலேசிய அருள்பணியாளர் ஆபிரகாம் கவலக்காட் அவர்கள் எழுதிய நூலுக்கு விருது 

அருள்பணி ஆபிரகாம் கவலக்காட் நூலுக்கு விருது

வத்திக்கான் செய்தித்துறையில் பணியாற்றும் சலேசிய அருள்பணியாளர் ஆபிரகாம் கவலக்காட் அவர்கள், எழுதிய "இறைவனின் வியத்தகு வழிகள்" என்ற நூலுக்கு விருது ஒன்று வழங்கப்பட்டது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான் செய்தித்துறையில் பணியாற்றும் சலேசிய அருள்பணியாளர் ஆபிரகாம் கவலக்காட் அவர்கள் எழுதிய "இறைவனின் வியத்தகு வழிகள்" என்ற நூலுக்கு, அண்மையில், நியூ யார்க் நகரில், விருது ஒன்று வழங்கப்பட்டது.

நியூ யார்க் நகரில் அமைந்துள்ள இத்தாலியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், சலேசிய சபையைச் சேர்ந்த கர்தினால் ஆஸ்கர் ரொத்ரிகுவெஸ் மரதியாகா, திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் தலைவர் - முனைவர் பவுலோ ருஃபீனி, மற்றும், இந்த அவையின் செய்திப் பிரிவு இயக்குனர் – முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிறிஸ்தவர் அல்லாதோரின் மீட்பைக் குறித்து இரண்டாம் வத்திக்கான் சங்கம் தொடங்கி, பல்வேறு திருஅவை படிப்பினைகள், மற்றும் திருத்தந்தையரின் கருத்துக்கள் ஆகியவை, "இறைவனின் வியத்தகு வழிகள்" என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

திருத்தந்தையர்களான புனித 23ம் ஜான், புனித 6ம் பவுல், புனித 2ம் ஜான்பால், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் ஆகிய அனைவரும், பகிர்ந்துள்ள கருத்துக்கள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

26 June 2019, 15:24