தேடுதல்

இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதி இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதி  

இந்தியா, பாகிஸ்தான் அமைதி உரையாடலை மீண்டும் துவங்க..

இந்திய-பாகிஸ்தான் பகுதியில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்குக் காரணமாகும் போரைத் தவிர்ப்பதற்கு, இவ்விரு நாடுகளின் தலைவர்களுக்கு இறைவன் ஞானத்தை வழங்குமாறு செபிப்போம்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானின் இராணுவ மற்றும் அரசியல் தலைமைத்துவத்தின் மிதவாத மற்றும் நியாயமான மனநிலையைப் பாராட்டியுள்ள பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவை, இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்கி, கலந்துரையாடல் வழியாக, அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

அந்த அவையின் தலைவர் பேராயர் ஜோசப் அர்ஷத், அந்த அவையின் தேசிய இயக்குனர் அருள்பணி இம்மானுவேல் யூசூப், செயல்திட்ட இயக்குனர் Cecil Shane Chaudhry ஆகிய மூவரும் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையில், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  

பேராயர் அர்ஷத் அவர்கள் பீதேஸ் செய்திக்கு அனுப்பிய அறிக்கையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இராணுவ அதிபர் Asif Ghafoor ஆகிய இருவரும், போரில் ஈடுபட மறுத்திருப்பது, உலகளாவிய ஆதரவைப் பெற்றுள்ளது எனவும், இந்தியத் தலைமை, உரையாடல் வழியே பிரச்சனைக்குத் தீர்வு காண அழைப்பு விடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்குக் காரணமாகும் போரைத் தவிர்ப்பதற்கு, அனைத்து வகைகளிலும் முயற்சிகள் எடுக்கப்படுமாறும், இவ்விரு நாடுகளின் தலைவர்களுக்கு இறைவன் ஞானத்தை வழங்குமாறு செபிப்பதாகவும் அந்த அறிக்கை உரைக்கின்றது.  

பாகிஸ்தான் மக்கள் போரை அல்ல, அமைதியையே விரும்புகின்றோம் என, அருள்பணி இம்மானுவேல் யூசூப் அவர்கள் தெரிவித்துள்ளார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 March 2019, 15:50