தேடுதல்

1219ம் ஆண்டில் அசிசி நகர் புனித பிரான்சிஸூம், எகிப்து சுல்தானும் சந்தித்தபோது... 1219ம் ஆண்டில் அசிசி நகர் புனித பிரான்சிஸூம், எகிப்து சுல்தானும் சந்தித்தபோது... 

புனித பிரான்சிஸ், சுல்தான், அல்-கமில் சந்திப்பின் 800ம் ஆண்டு

800ம் ஆண்டு நிறைவையொட்டி, கிறிஸ்தவ இஸ்லாமிய உறவையும், உரையாடலையும் வலியுறுத்தும் கருத்தரங்குகள், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடத்தப்படும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

1219ம் ஆண்டு, அசிசி நகர் புனித பிரான்சிஸ், எகிப்து சுல்தான், அல்-கமில் அவர்களைச் சந்தித்த நிகழ்வின் 800ம் நூற்றாண்டு நினைவு கொண்டாட்டம், அண்மையில் பாகிஸ்தான் தலத்திருஅவையில் சிறப்பிக்கப்பட்டது.

இஸ்லாமிய-கிறிஸ்தவ உரையாடலை வலியுறுத்தும் இந்நிகழ்வின் 800ம் ஆண்டு நிறைவை, பாகிஸ்தான் ஆயர் பேரவையின், உரையாடல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிக்குழு ஏற்பாடு செய்திருந்தது என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

இந்தக் கொண்டாட்டம், இலாகூர் பேராயர் செபாஸ்டின் ஷா அவர்களின் தலைமையில் நிகழ்ந்தது என்றும், பல்வேறு துறவு சபைகளைச் சேர்ந்த இருபால் துறவியர், அருள் பணியாளர்கள், மற்றும், இஸ்லாமிய அறிஞர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர் என்றும், பீதேஸ் செய்தி மேலும் கூறுகிறது.

இந்த 800ம் ஆண்டு நிறைவையொட்டி, கிறிஸ்தவ இஸ்லாமிய உறவையும், உரையாடலையும் வலியுறுத்தும் கருத்தரங்குகள், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் ஆயர் பேரவையின் உரையாடல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிக்குழுவின் செயலர், அருள்பணி பிரான்சிஸ் நதீம் அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

1219ம் ஆண்டு, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் போரில் ஈடுபட்டிருந்தபோது, அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள், எகிப்து சுல்தான் அல் கமில் அவர்களைச் சந்தித்த வேளையில், இஸ்லாமிய மரபில் கூறப்படும் வாழ்த்துரைக்கு ஈடான சொற்களைப் பயன்படுத்தி, "இறைவன் உங்களுக்கு சமாதானம் வழங்குவாராக" என்று வாழ்த்தியதாக வரலாறு கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2019, 15:36