தேடுதல்

Vatican News
 அ.பணிலூயிஸ் சவீனியன் துப்பியி அவர்கள் இறை ஊழியராக அறிவிக்கப்பட்ட திருப்பலி அ.பணிலூயிஸ் சவீனியன் துப்பியி அவர்கள் இறை ஊழியராக அறிவிக்கப்பட்ட திருப்பலி 

நேர்காணல் – இறை ஊழிர் லூயிஸ் சவீனியன் துப்பியி

நற்செய்திப் பணிக்கு பெண் கல்வியின் தேவையை உணர்ந்து 1844ம் ஆண்டு பாண்டிச்சேரியில், பெண்களுக்கென தூய இதய மரியன்னை பிரான்சிஸ்கன் சபையை ஆரம்பித்தார், இறை ஊழியர் லூயிஸ் சவீனியன் துப்பியி அவர்கள்

மேரி தெரேசா – வத்திக்கான்

இறை ஊழியர் லூயிஸ் சவீனியன் துப்பியி அவர்கள், 1806ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் நாள், பிரான்சின் Sensல் பிறந்தார். 1831ம் ஆண்டு பாரிஸ் வெளிநாட்டு மறைப்பணியாளர் சபையில் சேர்ந்த இவர், 1832ம் ஆண்டு பாண்டிச்சேரிக்கு வந்தார். நற்செய்திப் பணிக்கு பெண் கல்வியின் தேவையை உணர்ந்து 1844ம் ஆண்டு பாண்டிச்சேரியில், பெண்களுக்கென தூய இதய மரியன்னை பிரான்சிஸ்கன் சபையை ஆரம்பித்தார். இவர் 1874ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி இறைபதம் அடைந்தார். இறை ஊழியர் லூயிஸ் சவீனியன் துப்பியி அவர்களை, அருளாளர் நிலைக்கு உயர்த்தும் பணிகளை ஆற்றிவரும் குழுவில், வரலாற்று ஆணையப் பொறுப்பாளராகச் செயல்படுபவர், அ.பணி A.S. அந்தோனி சாமி அவர்கள். இன்று, இறை ஊழியர் லூயிஸ் சவீனியன் துப்பியி அவர்கள் பற்றி பகிர்ந்துகொள்கிறார் அ.பணி A.S. அந்தோனி சாமி அவர்கள்

நேர்காணல் – இறை ஊழியர் லூயிஸ் சவீனியன் துப்பியி
31 January 2019, 15:29